ஸ்மார்ட் போன் உலகில் இப்போது ஒளிப்படம் சார்ந்த செயலிகள் பிரபலமாகவும், சுவாரசியமாகவும் இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது பேஸ் ஆப் செயலி அறிமுகமாகி இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட இந்தச் செயலி பயனாளிகளின் ஒளிப்படத்தைப் பலவிதமாக மாற்றிக்கொள்ள உதவுகிறது. ஒருவர் தனது எதிர்காலத் தோற்றத்தை, புன்னகை மிக்க தோற்றத்தைக் காணலாம். பாலினத்தை மாற்றியும் பார்த்துக்கொள்ளலாம். இளம் வயதுத் தோற்றத்தையும் காணலாம்.
இந்தச் செயலியை வேறு பல விதங்களிலும் சுவாரசியமாகப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே உள்ள ஒளிப்படங்களைத் திருத்த அல்லது புதிதாக எடுத்த படத்தை மாற்றவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் செயலியின் சில அம்சங்கள் நிறவெறித் தன்மை கொண்டிருப்பதாகவும் சர்ச்சை உண்டாகியுள்ளது. எனினும் இது தொடர்பாகச் செயலியை உருவாக்கிய நிறுவனம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தச் செயலி பயனாளிகளை வெகுவாகக் கவர்ந்துவருகிறது. லட்சக்கணக்கில் இந்தச் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுவருகிறது. ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் இந்தச் செயலி செயல்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு: https://www.faceapp.com/
Eelamurasu Australia Online News Portal