ZTE நிறுவனத்தின் துணை நிறுவனமான நுபியா, தனது “நுபியா Z17” என்ற புதிய ஸ்மார்ட் போன் ரகத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய ரக ஸ்மார்ட் போன் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக நுபியா நிறுவனத்தின் இணையதளத்தில் Z17 ஸ்மார்ட் போன் குறித்த தகவல்கள் வெளியாகின. பின்னர் இந்த தகவல் அந்த இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டது.
இணையதளத்தில் வெளியான தகவல்களின்படி, பிங்கர் பிரிண்ட் சென்சார் கருவியுடன் முன் மற்றும் பின் பக்க கேமிராக்களுடன் இந்த ஸ்மார்ட் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எட்ஜ் பெசிலெஸ் டிஸ்பிளேயுடன் இந்த ஸ்மார்ட் போன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 6 ஜிபி ராம் 128 ஜிபி உள்ளக நினைவகம் , 8 ஜிபி ராம் மற்றும் 128 உள்ளக நினைவகம் என இரண்டு ரகத்தில் இந்த ஸ்மார்ட் போன் வெளியாக உள்ளது. மூன்று வகையான நிறங்களில் இந்த ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வரும்.
ஆண்ட்ராய்ட் நவ்கட் 7.1 இயங்குதளத்துடன் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 835 பிராசசர் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நுபியா நிறுவனம் எம்2 என்ற புதிய ரக ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. எனவே எம்2 கொண்டுள்ள சிறப்பம்சங்கள் Z17 போனில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal