நுட்பமுரசு

மீண்டும் களத்தில் இறங்கும் நோக்கியா 3310

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் களமிறங்க இருப்பதாக கூறப்படும் நோக்கியா 3310 ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் பல்வேறு கான்செப்ட் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அவ்வப்போது இணையத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்து நோக்கியா ஸ்மார்ட்போன்கள் இப்படித் தான் இருக்கும் என்ற வகையில் ஸ்மார்ட்போன்கள் லீக் ஆகின. அப்படியாக சில தினங்களுக்கு முன் நோக்கியா 3310 பீச்சர்போன் மீண்டும் வெளியிடப்படலாம் என்ற தகவல் ...

Read More »

நவீன ஏர்பஸ் ஏ350 விமானத்தின் சிறப்புகள்!

உலகின் மிகவும் நவீன விமான மாடல்களில் ஒன்றாக புதிய ஏர்பஸ் ஏ350-900 விமானம் சந்தைக்கு வந்துள்ளது. இந்த விமானத்தை முதலாவதாக மூனிச்- டெல்லி வழித்தடத்தில் அறிமுகம் செய்துள்ளது லூஃப்தான்ஸா விமான நிறுவனம். மூனிச் விமான நிலையத்தில் வெகு விமரிசையாக நடத்தியது லூஃப்தான்ஸான் நிறுவனம். அனைவரின் கவனத்தையும் இந்த விமானம் ஈர்த்துள்ளதற்கான சில காரணங்களை இந்த செய்தியில் சர்வீஸ் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானங்களை லூஃப்தான்ஸா டெலிவிரி பெற்றுள்ளது. அதில், முதலாவது விமான சர்வீஸ் மூனிச்- டெல்லி இடையே துவங்கி ...

Read More »

டுபாயில் அறிமுகமாகும் பறக்கும் கார் டாக்சி!

உலகின் சிறந்த சுற்றுலா நகரங்களில் ஒன்றாக விளங்கும் துபாய் நவீன போக்குவரத்து சாதனங்களை இயக்குவதற்கு அதீத ஆர்வம் காட்டி வருகிறது. அண்மையில் ஹைப்பர்லூப் ஒன் என்ற அதிவேக போக்குவரத்து சாதன கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளிலும், டிரைவரில்லாமல் இயங்கும் மினி பஸ்சை இயக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பறக்கும் வாடகை கார்களை அறிமுகம் செய்வதற்கு அந்நாட்டு போக்குவரத்து துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பைலட் இல்லாமல் இயங்கும் பறக்கும் கார்களை துபாய் போக்குவரத்து ஆணையம் சோதனை செய்துள்ளது. வரும் ஜூலை மாதத்தில் இருந்து இந்த பறக்கும் ...

Read More »

பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்ட புதிய பென் டிரைவ் அறிமுகம்

கிங்ஸ்டன் நிறுவனத்தின் டேட்டா டிராவெல்லர் 2000 யுஎஸ்பி 3.1 டிரைவ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தரவுகளை பாஸ்வேர்டு கொண்டு பாதுகாக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. கிங்ஸ்டன் நிறுவனம் டேட்டா டிராவெல்லர் 2000 யுஎஸ்பி 3.1 டிரைவினை அறிமுகம் செய்துள்ளது. ஆல்ஃபாநியூமெரிக் கீபேட் கொண்டுள்ள இந்த டிரைவ் அதனுள் இருக்கும் தரவுகளை பாஸ்வேர்டு கொண்டு பாதுகாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் XTS மோடு AES 256-பிட் டேட்டா என்க்ரிப்ஷன் வசதி கொண்ட வன்பொருள் வழங்கப்பட்டுள்ளது. என்க்ரிப்ஷன் செய்யப்படுவதால் இந்த டிரைவினுள் வைக்கப்படும் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும் ...

Read More »

புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்: பிப்ரவரி 26-இல் அறிமுகம்

நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 26 ஆம் திகதி புதிய நோகர்ரகியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என முன்னதாக தகவல்கள் வெளியான தகவல்களில் கூறப்பட்டது. எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை சீனாவில் வெளியிட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவிற்கான அழைப்புகளை வெளியிட்டுள்ளது. வெளியாகியுள்ள அழைப்புகளை தொடர்ந்து எச்எம்டி குளோபல் நிறுவனம் பல்வேறு நோக்கியா 3, நோக்கியா 5 ...

Read More »

கோப்பி பானம் ஆற்றி தரும் ரோபோ!

ஸ்டார்பக்ஸ் போன்ற பிரபல காபி ஷாப்களில், வாடிக்கையாளர்கள் க்யூவில் நின்று தான் காபி வாங்க வேண்டும். இதனால் நேர விரயமாவதோடு, காபிக்கும் அதிக விலை தரவேண்டியிருக்கிறது. இதை மாற்ற, ரோபோவை காபி தயாரித்து பரிமாற பயன்படுத்தினால் என்ன என, நினைத்தார் அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த ஹென்றி ஹ்யூ. இந்த யோசனையை ரசித்த இடர் நிதி முதலீட்டாளர்கள் சிலர், ஹென்றிக்கு ஒரு லட்சம் டாலர் வரை முதலீடு தந்தனர். அதைவைத்து மிட்சுபிசி 6-ஆக்சிஸ் ரோபோ ஒன்றை வாங்கி அதற்கு காபி தயாரிக்கும் மென்பொருள் நிரல்களை ...

Read More »

சியோமி ரெட்மி நோட் 4X

சியோமி நிறுவனம் பிரத்தியேகமாக வெளியிட்ட சியோமி ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. இதன் விலை 189 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து ரெட்மி நோட் 4X எனும் பிரத்தியேக பதிப்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அறிமுகம் செய்யப்பட்ட சில தினங்களை கடந்து ரெட்மி நோட் 4X  முன்பதிவு கிஸ்டாப் தளத்தில் துவங்கியுள்ளது. 189 டாலர்கள் அதாவது இந்திய ...

Read More »

நோக்கியா N சீரிஸ்: புத்தம் புதுப் பொலிவுடன்

நோக்கியா நிறுவனத்தின் பிரபலமான N சீரிஸ் பெயரில் புதிய போன்கள் மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்ய எச்எம்டி குளோபல் திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியினை எச்எம்டி நிறுவனம் கோரியுள்ளது. மொபைல் போன் சந்தையில் நோக்கியா பிராண்டு ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் மறக்கவும், மறுக்கவும் முடியாது. மொபைல் போன் விற்பனையில் பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கும் நோக்கியா நிறுவனம் சந்தையில் சில காலம் இடைவெளி எடுத்துக் கொண்டாலும் இன்றும் நோக்கியாவிற்கான பெயர் அப்படியே தான் இருக்கிறது எனலாம். விரைவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் பல்வேறு ...

Read More »

அஜீரணத்துக்கு ஆறுதல் தரும் சாதனம்!

ஒருவரது வயிற்றுக்கு, என்ன வகை உணவுகள் ஏற்றது என்பதை தீர்மானிக்க உதவும் சாதனத்தை சீனாவிலுள்ள, ‘ஹேக்ஸ்’ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.’ஏர்’ (Aire) எனப்படும் இந்த கையடக்க சாதனத்தை வாயில் வைத்து ஊதினால், மூச்சுக் காற்றில் உள்ள வேதிப் பொருட்களில், வயிற்றுக் கோளாறுக்கு காரணமான வற்றை கண்டறிந்து, அச்சாதனம் சொல்லிவிடும். இச்சாதனத்தை, ‘ஏர்’ மொபைல் செயலியுடன் இணைக்கும்போது, அது பயனாளியின் உணவுப் பழக்கம் மற்றும் ஒவ்வாமைகளை தொடர்ந்து பதிவு செய்யும். பின், இப்போது என்ன வகை உணவை அவர் சாப்பிடலாம் என்ற ஆலோசனையையும் அது ...

Read More »

ஐபோன் 8: முன்னதாக துவங்கும் தயாரிப்பு பணிகள்

அப்பிள் ஐபோன்களின் 10-வது ஆண்டு விழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதன் காரணமாக ஐபோன் 8 அதிக ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதன் தயாரிப்பு பணிகள் முன்னதாகவே துவங்குகிறது என கூறப்படுகிறது. அப்பிள் ஐபோன்களின் 10-வது ஆண்டு விழாவையொட்டி ஐபோன் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்றும் அதிகளவு மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டையும் போன்றே இந்த ஆண்டும் அப்பிள் ஐபோன்கள் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இவற்றின் தயாரிப்பு பணிகள் திட்டமிட்டதை விட முன்னதாகவே துவங்க ...

Read More »