சியோமி ரெட்மி நோட் 4X

சியோமி நிறுவனம் பிரத்தியேகமாக வெளியிட்ட சியோமி ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. இதன் விலை 189 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து ரெட்மி நோட் 4X எனும் பிரத்தியேக பதிப்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அறிமுகம் செய்யப்பட்ட சில தினங்களை கடந்து ரெட்மி நோட் 4X  முன்பதிவு கிஸ்டாப் தளத்தில் துவங்கியுள்ளது. 189 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.12,633 விலைக்கு விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை பின்வருமாறு.
சியோமி ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி வளைந்த டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் MIUI 8 சார்ந்த யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. சியோமி ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போன் ஐந்து வெவ்வேறு நிறங்களில் கிடைக்கின்றது.