பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்ட புதிய பென் டிரைவ் அறிமுகம்

கிங்ஸ்டன் நிறுவனத்தின் டேட்டா டிராவெல்லர் 2000 யுஎஸ்பி 3.1 டிரைவ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தரவுகளை பாஸ்வேர்டு கொண்டு பாதுகாக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கிங்ஸ்டன் நிறுவனம் டேட்டா டிராவெல்லர் 2000 யுஎஸ்பி 3.1 டிரைவினை அறிமுகம் செய்துள்ளது. ஆல்ஃபாநியூமெரிக் கீபேட் கொண்டுள்ள இந்த டிரைவ் அதனுள் இருக்கும் தரவுகளை பாஸ்வேர்டு கொண்டு பாதுகாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் XTS மோடு AES 256-பிட் டேட்டா என்க்ரிப்ஷன் வசதி கொண்ட வன்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
என்க்ரிப்ஷன் செய்யப்படுவதால் இந்த டிரைவினுள் வைக்கப்படும் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்க்ரிப்ஷன் வசதி மூலம் ஆபத்து நேரத்தில் முழுமையான தகவல்களும் எவ்வித சுவடுகளும் இன்றி அழிக்கப்பட்டு விடுகிறது.
FIPS 197 சான்று பெற்றிருப்பதால் உயர் ரக என்க்ரிப்ஷன் செய்யப்படுகிறது. மேலும் இதன் வடிவமைப்பு இதனை தூசு மற்றும் நீர் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெமரியை பொருத்த வரை கிங்ஸ்டன் யுஎஸ்பி 3.1 டிரைவில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி வரை வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை முறையே ரூ.10,000, ரூ.14,000 மற்றும் ரூ.18,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.