நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 26 ஆம் திகதி புதிய நோகர்ரகியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என முன்னதாக தகவல்கள் வெளியான தகவல்களில் கூறப்பட்டது. எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை சீனாவில் வெளியிட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவிற்கான அழைப்புகளை வெளியிட்டுள்ளது.
வெளியாகியுள்ள அழைப்புகளை தொடர்ந்து எச்எம்டி குளோபல் நிறுவனம் பல்வேறு நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் அனைத்து நாடுகளிலும் நோக்கியா 6 வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. அதன் படி நோக்கியா 5 ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எச்டி டிஸ்ப்ளே, 2ஜிபி ரேம், 12 எம்பி பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
நோக்கியா 3 ஸ்மார்ட்போனில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை, எனினும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் ரூ.11,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் நோக்கியா 6 மற்றும் நோக்கியா 5 முறையே ரூ.18,000 மற்றும் ரூ.14,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் நோக்கியா N சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீண்டும் வெளியாகும் என தெரிவித்தது. இதன் காரணமாக நோக்கியா N சீரிஸ் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 22 ஆம் திகதி வெளியிடப்படும் என தெரிகிறது.