அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவில் மருத்துவரின் கொலை எவ்வாறு கசிந்தது!

அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் கொலை வழக்கில் அதிரடியான புதிய தகவல்கள் கசிந்துள்ளன. சிட்னியில் உள்ள மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வரும் ப்ரீத்தி ரெட்டி (வயது 32) மார்ச் 4 ஆம் திகதி காணாமல் போய் 3 நாட்கள் கழித்து அவரது காரிலேயே சடலமாக மீட்கப்பட்டார். ப்ரீத்தி மற்றும் ஹர்ஸவர்தன் ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இடையில் இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் காதலன், ப்ரீத்தியை திட்டமிட்டுக் ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தற்கொலை முயற்சிகள்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்திருக்கும் வில்லாவுட் தடுப்பு முகாமில் 27 வயது ஆப்கான் அகதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே முகாமில் மூன்று தினங்களுக்கு முன்னர் ஈராக் அகதி தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது தற்கொலைக்கு முயன்ற ஆப்கான் அகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் 2012 முதல் தடுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல், அந்த அகதியின் தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். “ஆஸ்திரேலிய அரசு வேண்டுமென்றே குடிவரவு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இளைஞனைத் தாக்கிய கங்காரு!-காணொளி

பாராசூட் மூலம் தரையிறங்கியவரை கங்காரு தாக்கி காயப்படுத்திய காணொளி  வெளியாகி உள்ளது. அவுஸ்திரேலியாவில் கான்பெரா அருகே உள்ள வனப்பகுதியில், பாரா கிளைடிங் செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த இறங்கு தளத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த கங்காரு ஒன்று வேகமாக வந்து குறித்த இளைஞனை தாக்கியுள்ளது. முன்பக்க கால்களால் தாக்கியதில் இளைஞரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More »

அவுஸ்திரேலியாவில் திமிங்கலத்தின் வாய்க்குள் மாட்டிக் கொண்ட நபர்!

அவுஸ்திரேலியாவுக்கருகே ஆவணப்படம் ஒன்றை எடுப்பதற்காக குழு ஒன்று கடலுக்கு சென்றிருந்த போது ஒரு ஆழ்கடல் நீச்சல் வீரர் திமிங்கலத்தின் வாயில் சிக்கியுள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரரான Rainer Schimpf (51) தனது குழுவினருடன் கேப் டவுனுக்கு கிழக்காக உள்ள கடல் பகுதியில் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். இரு குழுக்களாகப் பிரிந்து அங்கு நீந்திக்கொண்டிருந்த மீன்களையும், பறந்து கொண்டிருந்த பறவைகளையும் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தனது இடுப்பை ஏதோ பலமாக அழுத்துவதை உணர்ந்தார் Rainer. சில வினாடிகளுக்கு பிறகுதான் தான் ஒரு ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் திகதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் சொகுசு காரை மோதச் செய்தான். அதில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா ...

Read More »

அவுஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயர்தோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

அவுஸ்திரேலியாவில் 3 புதிய விசா பிரிவுகளை அவுஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயர் சமூகத்தினருக்கு பயன்தரும் வகையில் இந்த விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புலம்பெயர் சமூகத்தினர் நீண்டநாட்களாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இப்புதிய 3 வகை விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடிவரவு அமைச்சர் David Coleman இதனை தெரிவித்துள்ளார். இம்மூன்று புதிய விசாக்களில் முதலாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தற்காலிக பெற்றோர் விசாவாகும். எதிர்வரும் ஏப்ரல் 17ம் திகதி முதல் தமது பெற்றோருக்கான விசா விண்ணப்பங்களை பிள்ளைகள் தாக்கல் செய்யலாம். Sponsored Parent (Temporary) subclass 870 பிரிவில் ...

Read More »

இரண்டு இலட்சம் கையொப்பங்களை பெற்ற ஈழத்தம்பதி!

அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு கோரும் இணைய மனுவொன்றில் இதுவரையில் சுமார் இரண்டு இலட்சம் பேர் கையொப்பமிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் இருந்து கடந்த 12 மாதங்களுக்கு முன்னர் புகலிட கோரிய நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது குழந்தைகளான கோபிகா, தருணிக்கா ஆகியோரை குடிவரவுத் துறை அதிகாரிகள் நாடுகடத்துவதற்காக கொண்டு சென்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாடு கடத்தப்பட இருந்த நிலையில் குயின்ஸ்லாந்தில் பகுதியை சேர்ந்த மக்கள் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் பெண் மருத்துவர் படுகொலை!

ஆஸ்திரேலியாவில் காணாமல் போன இந்திய பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிணத்தை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் பிரீத்தி ரெட்டி (32). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 3-ஆம் திகதி செயின்ட் லியோனார்ட்ஸ் என்ற இடத்தில் நடந்த பல் மருத்துவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து  காவல் துறையினர்  பல ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கையாளரின் மரணம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி விலவூட் அகதிகள் தடுப்பு முகாமில் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விலவூட் தடுப்புமுகாமில் வாழ்ந்த Sierra Leone-ஐ சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் ஜனவரி இறுதியில் உயிரிழந்திருந்த பின்னணியில் கடந்த 6 வாரங்களுக்குள் அங்கு இடம்பெற்றுள்ள 2வது உயிரிழப்பு இதுவெனக் கூறப்படுகிறது. ஈராக் பின்னணி கொண்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சடலமாக தனது அறையிலிருந்து மீட்கப்பட்டதாக அகதிகள் செயற்பாட்டாளர் Ian Rintoul தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த மரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் ...

Read More »

சிறை தண்டனை பெற்றவர்கள் அவுஸ்ரேலியா வரத்தடை!

உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அந்நாடு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் குடியுரிமை மந்திரி டேவிட் கோல்மேன் கூறுகையில், “உள்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஆஸ்திரேலியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அவர்கள் ஆஸ்திரேலியாவில் வரவேற்கப்படமாட்டார்கள்” என கூறினார். ...

Read More »