அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் கொலை வழக்கில் அதிரடியான புதிய தகவல்கள் கசிந்துள்ளன.
சிட்னியில் உள்ள மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வரும் ப்ரீத்தி ரெட்டி (வயது 32) மார்ச் 4 ஆம் திகதி காணாமல் போய் 3 நாட்கள் கழித்து அவரது காரிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.
ப்ரீத்தி மற்றும் ஹர்ஸவர்தன் ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இடையில் இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் காதலன், ப்ரீத்தியை திட்டமிட்டுக் கொலை செய்துவிட்டு தானும் காரை மோதி விபத்தை ஏற்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதேவேளை இக் கொலை சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள் கசிந்துள்ளன. மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற ப்ரீத்தி தனது காதலனுடன் சிட்னி ஹோட்டலில் தங்கியுள்ளார். காலை உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு,
நான் விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என 1.46 மணியளவில் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்துதான் இந்த தொலைபேசித் தொடர்புகளை எடுத்துள்ளார்.
இதன்போது அவருடன் இருந்த காதலன் ஹர்ஷா அதனை ஒட்டுக்கேட்டுள்ளார். அதன்பின்னர் தான் பலமுறை கத்தியால் குத்தி ப்ரீத்தியை கொலையை செய்துள்ளார்.
பின்பு சடலத்தை சூட்கேஸில் அடைத்து உதவியாளரின் உதவியுடன் வெளியே கொண்டு வந்த ஹர்ஷா, அவரது காருக்குள் வைத்துவிட்டு சுமார் ஏழு கிலோ மீற்றர் தொலைவில் சென்று காரை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கு பின் இந்தியாவில் இருக்கும் தனது சகோதருக்கு 10 முறை போன் செய்துள்ளார் ஹர்ஷா.
தங்களது மகன் இப்படி ஒரு கொலையை செய்திருக்கமாட்டான் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal