அவுஸ்திரேலியாவுக்கருகே ஆவணப்படம் ஒன்றை எடுப்பதற்காக குழு ஒன்று கடலுக்கு சென்றிருந்த போது ஒரு ஆழ்கடல் நீச்சல் வீரர் திமிங்கலத்தின் வாயில் சிக்கியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரரான Rainer Schimpf (51) தனது குழுவினருடன் கேப் டவுனுக்கு கிழக்காக உள்ள கடல் பகுதியில் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.
இரு குழுக்களாகப் பிரிந்து அங்கு நீந்திக்கொண்டிருந்த மீன்களையும், பறந்து கொண்டிருந்த பறவைகளையும் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தனது இடுப்பை ஏதோ பலமாக அழுத்துவதை உணர்ந்தார் Rainer.
சில வினாடிகளுக்கு பிறகுதான் தான் ஒரு திமிங்கலத்தின் வாய்க்குள் சிக்கியிருப்பது அவருக்குத் தெரிந்தது.
பயப்படக்கூட தனக்கு அப்போது தோன்றவில்லை என்று கூறும் Rainer, இரையைப் பிடித்ததும் திமிங்கலம் அதை ஆழத்திற்கு கொண்டு செல்லும் என்பதைஅறிந்திருந்ததால் மூச்சை அடக்கிக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.
அவரது தலையும் மார்பும் திமிங்கலத்தின் வாய்க்குள் இருக்க, ஒரே இருட்டாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் மீண்டும் தண்ணீரில் இருப்பதை உணர்ந்திருக்கிறார்.
இதற்கு காரணம் திமிங்கலங்கள் மனிதர்களை உண்பதில்லை, அத்துடன் அவற்றிற்கு நுண்ணறிவு மிக அதிகம். எனவே தன் வாயில் சிக்கியிருப்பது ஒரு மனிதன் என்பதை உணர்ந்து கொண்ட அந்த திமிங்கலம், உடனடியாக அவரை துப்பியிருக்கிறது.
எந்நேரமும் உயிர் போய் விடலாம் என்றிருந்த நிலை மாறி, தான் ஃப்ரீயாக நீந்திக் கொண்டிருப்பதை உணர Rainerக்கு சிறிது நேரம் எடுத்துள்ளது எனக் கூறப்படுகிறது.
நீந்தி தன் குழுவினர் இருந்த படகுக்கு வந்த Rainer கேட்ட முதல் கேள்வி, அதை நீங்கள் படம் பிடித்தீர்களா என்பதுதான்.
அவருடன் சென்ற புகைப்படக்காரரான Heinz Toperczer, அப்படியே படம் பிடித்துள்ளார்.