அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவில் தமிழர் விடுதலைக்கான தொடர் போராட்டம் ஆரம்பம்!!

அவுஸ்திரேலியாவில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக தமிழ் ஏதிலிகள் கழகம் அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: ஆஸ்திரேலியாவில் காலவறையின்றி தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் ஈழ தமிழர்களை உடனடியாக விடுதலை செய் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களே! நீண்ட காலமாக எந்த காலவரையும் இல்லாமல் தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் இலங்கை அகதிகளின் விடுதலைக்காக ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கருணை கொலையான அம்மாவைப் பற்றி மகள் கண்ணீர்….!

அவுஸ்திரேலியாவில் புற்றுநோயால் அவதிபட்டு வந்த தாயின் வலிகளை பார்க்க முடியாமல் அவதிப்பட்ட மகள்கள், அவருக்கு சிரமம் இல்லாமல் விடை கொடுத்திருக்கும் சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கெர்ரி ராபர்ட்சன்(61). இவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்த வந்த போதும், எலும்புகள், நுரையீரல், கல்லீரல், இதயம் என அனைத்துப் பாகங்களுக்கு படிப்படியாக புற்றுநோய் பரவியது இதன் காரணமாக உடல்வலியால் மிகக்கடுமையான துன்பத்தை அனுபவித்து வந்தார். தொடர்ந்து மேற்கொண்டு வந்த கீமோதெரபி, லேசர் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனையை எதிர்நோக்கும் கணேசமூர்த்தி தியாகராஜா!!

அவுஸ்திரேலியாவில் தனது நண்பர் ஒருவரை படுகொலை செய்த இலங்கைத்தமிழர் ஒருவர் சிறைத்தண்டனையை எதிர்நோக்கின்றார் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் அகதியாக தஞ்சமடைந்த கணேசமூர்த்தி தியாகராஜா என்பவரிற்கே சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அடிலெய்டில் உள்ள பென்பீல்ட் கார்டன் வீட்டில்  தனது நண்பரான முகமட் மன்சூரை இவர் படுகொலை செய்தார் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இம்மாத இறுதியில் நீதிமன்றம் இவரிற்கான தண்டனையை அறிவிக்கவுள்ளது. மன்சூர் தனது நண்பராக விளங்கவேண்டிய ஒருவரால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார் என ...

Read More »

மிக மூத்த இந்திய-ஆஸ்திரேலியர் 107 வயதில் காலமானார்!

சிட்னியில் வாழ்ந்துவந்த நாட்டின் மிக மூத்த இந்திய-ஆஸ்திரேலியரான Shankerlal Dalsukhram Trivedi அண்மையில் தனது 107வது வயதில் காலமானார். Shankerlal Dalsukhram Trivedi 28ம் திகதி டிசம்பர் மாதம் 1911ம் ஆண்டு இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வஸ்னா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது மனைவி 1993ம் காலமானதைத்தொடர்ந்து இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து அங்கு 8 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் 2001-இல் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு குடிபெயர்ந்து ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொண்டார். சிட்னியில் வாழ ஆரம்பித்த காலம்முதல் குஜராத் பின்னணி கொண்ட இந்தியர்களின் நன்மதிப்பை சம்பாதித்துக்கொண்ட Shankerlal Dalsukhram ...

Read More »

251 ஓட்டத்தினால் ஆஸி. அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஆஷஸ் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றுள்ளது.   இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த முதலாம் திகதி பேர்மிங்கமில் ஆரம்பமான முதலாவது போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலிய அணி 284 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 374 ஓட்டங்களையும் எடுத்திருந்தன. 90 ஓட்டம் என்ற ...

Read More »

பூர்வகுடிகள் ஐந்துபேர் படகு மூழ்கி பரிதாபமாக பலி?

ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் வாழும் Torres Strait பகுதி கடலில் இரண்டு தீவுகளுக்கு இடையில் படகில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காணாமல்போயுள்ளனர். இவர்களது படகு மீட்கப்பட்டுள்ளபோதும் பயணம் செய்த எவரையும் நான்கு நாட்களாக கண்டுபிடிக்கமுடியவில்லை. கடல்வழியாகவும் வான் வழியாகவும் தங்களது தேடுதல் பணிகளை மேற்கொண்டு தோல்வியடைந்த மீட்புப்படையினர் குறிப்பிட்ட குடும்பத்தின் உறவினர்களிடம் தாங்கள் தேடுதல் பணியை நிறுத்துவதாகவும் காணாமல்போனவர்கள் உயிருடனிருப்பதற்கான சாத்தியமில்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள். Badu தீவிலிருந்து Dauan தீவுக்கு கடந்த 31 ஆம் திகதி படகில் புறப்பட்டு சென்றவர்களுக்கே இந்த ...

Read More »

இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆவுஸ்திரேலியா!

வளர்ந்த நாடுகளில் முன்னணியில் உள்ள ஆஸ்வுதிரேலியாவுக்கு செல்வது இந்தியர்களுக்கு அமெரிக்க கனவைப் போன்றதே.  இவ்வாறான சூழலில் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு Backpacker விசாவில் வேலை செய்வதற்கான அனுமதியை ஆவுஸ்திரேலியா வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   தற்போதைய நிலையில், குறித்த விசாவில் வேலை செய்ய பிரேசில், மெக்ஸிக்கோ, பிலிப்பைன்ஸ், சுவிஸ், பிஜி, சொலமன் தீவுகள், குரோஷியா, லத்வியா, லித்துவேனியா, அன்டோரா, மொனாகோ மற்றும் மங்கோலியா உள்ளிட்ட நாட்டவர்களுக்கே ஆவுஸ்திரேலியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவுஸ்திரேலியாவின் பெரும் நிலப்பரப்புகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்து ...

Read More »

செலவீனங்களை வரி ஊடாக பெற விநோதமான விண்ணப்பங்கள்!

திருமணச்செலவு, குழந்தை பராமரிப்பு, பல்வைத்தியம் போன்ற – வரியில் மீளப்பெறமுடியாத செலவினங்களையெல்லாம் tax return ஊடாக மீளப்பெற்றுக்கொள்வதற்கு சுமார் ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று  ATO-ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தரவுகள் குறித்து வரித்திணைக்கள துணை ஆணையர் Karen Foat குறிப்பிடும்போது இந்த தகவலை கூறினார். கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017 ஆம் ஆண்டு இவ்வாறு முறையற்ற கோரிக்கைகள் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். Tax return விண்ணப்பங்களில் தமக்கு கிடைத்த விநோதமான சில சம்பவங்களை அவர் ...

Read More »

ஆஷஸ் என்றால் என்ன?

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1882 ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 7 ஓட்டத்தினால் தோற்கடித்தது. இப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 85 ஓட்டங்களை  கூட எடுக்க முடியாத இங்கிலாந்து அணி 77 ஓட்டத்துக்குள் சுருண்டு 7 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. இங்கிலாந்து மண்ணில் அவுஸ்திரேலியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இங்கிலாந்தின் மோசமான ஆட்டத்தை கண்டு வெறுப்படைந்த ‘தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்’ என்ற பத்திரிகை வித்தியாசமான இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், ‘ஓவலில் 1882 ஆம் ...

Read More »

மெல்பேர்னில் காணாமல்போன இலங்கை மாணவன்! 10 நாட்களாகியும் தகவலில்லை

மெல்பேர்னில் காணாமல்போயுள்ள இலங்கை மாணவன் தொடர்பிலான விவரங்கள் எதுவும் பத்துநாட்களுக்கு மேலாகியும் தெரியவராதநிலையில், இலங்கையிலிருந்து மெல்பேர்னுக்கு வந்துள்ள அவரது பெற்றோர் தங்களது மகனை யாராவது கண்டால் தமக்கு தகவல் தரும்படி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மெல்பேர்ன் Deakin பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் கற்கைநெறியை பயின்றுவந்த 21 வயதான Thidinika Prathibha Kulathunga Kulathunga Mudiyanselage என்ற இளைஞரே கடந்த சனிக்கிழமை முதல் இவ்வாறு காணாமல்போயிருப்பவர் ஆவார். மெல்பேர்ன் Craigieburn பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டு காரில் வந்துகொண்டிருக்கும்போது, தான் வீட்டுக்கு செல்வதாக தொலைபேசியில் பேசிய தகப்பனுக்கு தகவல் கூறியபிறகு, அவர் வீடு ...

Read More »