அவுஸ்திரேலியமுரசு

உலகின் மிக உயர்ந்த திறன்கொண்ட குடியேறிகளை குறிவைக்கிறோம்!-ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை

ஆஸ்திரேலியாவில் அதிகம் சம்பளம் பெறும் திறன்வாய்ந்த வெளிநாட்டினருக்கு விரைவாக நிரந்தர வதிவிட விசா வழங்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய அரசு. ஆண்டுக்கு 5000 பேர் என்ற கணக்கில் Fintech, Space, Advanced Manufacturing உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் கொண்ட வெளிநாட்டினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. “இத்திட்டத்தின் மூலம், உலகின் மிக உயர்ந்த திறன்கொண்ட குடியேறிகளை நாங்கள் குறிவைக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன். கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ள துறைகளில் ஆண்டுக்கு 149,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு (சுமார் 70 லட்சம் இந்திய ...

Read More »

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 2 பேர் பலி; 150 வீடுகள் நாசம்!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 2 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீ காரணமாக நாசமாகி உள்ளன. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் தீயணைப்பு அதிகாரிகள் தரப்பில், ”ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் வரை காயமடைந்துள்ளனர். சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகி உள்ளன. தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. மேலும், காட்டுத் தீ ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச மாநாட்டில் தீவிரவாத நிதியை தடுக்க இந்தியா வலியுறுத்தல்!

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டு பவர்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. ‘தீவிரவாதத்துக்கு நிதி இல்லை’ என்ற தலைப்பிலான மாநாடு ஆஸ்தி ரேலியா தலநகர் மெல்போர்னில் நடந் தது. தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப் பதைத் தடுக்க இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்ட ‘எக்மோன்ட் குழு’ என்ற அமைப்பு 1995-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த நாடுகளைச் சேர்ந்த ‘நிதி நுண்ணறிவுப் பிரிவுகள்’ சார்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய ...

Read More »

விமானத்துக்கு வெடிகுண்டு வைப்பதாக அச்சுறுத்தல்! -தண்டனைக்காலம் குறைப்பு!

விமானத்தை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையொருவின் விளக்கமறியல் காலம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய விமானத்தில் மனோத் மார்க்ஸ் என்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருடன் விமானியின் அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்று, விமானத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தார். எனினும் சாதுரியமாக செயல்பட்ட பயணிகள் அந்த நபரை பிடித்து விமான ...

Read More »

தஞ்சக்கோரிக்கையாளர்களை கடத்தியவருக்கு பிணை மறுத்துள்ள ஆஸ்திரேலிய நீதிமன்றம்!

ஆஸ்திரேலியா: இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக குழந்தைகள் உள்பட 353 தஞ்சக்கோரிக்கையாளர்களை கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மேதெம் ரதி என்ற 43 வயது ஈராக்கியருக்கு பிணை (ஜாமீன்) மறுத்துள்ளது ஆஸ்திரேலிய நீதிமன்றம். பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறக்கூடிய வாய்ப்புள்ளதாகக் கூறி பிணை மறுக்கப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு நடந்த இந்த ஆட்கடத்தல் சம்பவத்தில் 353 பேரும் கடல் மூழ்கி இறந்தது, அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்த ...

Read More »

கண்களுக்குள் பச்சை குத்திக்கொண்ட அழகிய இளம்பெண்!-அவுஸ்ரேலியா

பச்சை குத்திக்கொள்வதில் தீராத வெறிகொண்ட ஒரு பெண், கண்களில் பச்சை குத்திக்கொண்டதால் பார்வை இழக்கும் நிலைக்கு சென்றார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ’டிராகன் பெண்  ’ என்று அழைக்கப்படும் Amber Luke (24)க்கு பச்சை குத்திக்கொள்வது என்றால் அப்படி ஒரு ஆசை. சுமார் 26,000 டொலர்கள் செலவு செய்து, தலை முதல் பாதம் வரை 200 இடங்களில் பச்சை குத்திக்கொண்டுள்ள Amber, தனது கண்களையும் நிறம் மாற்றிக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி கண்களில் பச்சை குத்திகொள்வது என தீர்மானித்தார் Amber. அவரது கண்களுக்குள் 40 நிமிடங்கள் ...

Read More »

பூனைக் குட்டிகளை கைவிட்டுச் சென்ற ஜோடியை தேடும் அவுஸ்திரேலிய காவல் துறை!

அவுஸ்திரேலியா நாட்டில் தென்பகுதியிலுள்ள அடிலேய்ட் நகரத்திலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் பூனை குட்டிகளை கைவிட்டு சென்ற தம்பதிகளை காவல் துறை தேடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று இரண்டு  பூனை குட்டிகளை தம்பதியினர் கடைத்தொகுதி ஒன்றில் கைவிட்டு செல்லும் காட்சி சிசிரிவி  கமராவில் பதிவாகியுள்ளது. பூனையை கண்ட துப்புரவு பணியில்  ஈடுபட்டிருந்த ஊழியர்  பாதுகாப்பு ஊழியர்களுக்கு தகவலை தெரிவித்து அவற்றை பத்திரமாக மீட்டு காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில், குறித்த சிசிரிவி காணொளியியை வைத்து குறித்த தம்பதிகளை காவல் துறையினர்   தேடி வருகின்றனர். இரண்டு பூனைக்குட்டிகளும் ஆண் ...

Read More »

5 வயது சிறுவனால் குடும்பத்தை நாடு கடத்த உத்தரவிட்ட அவுஸ்திரேலிய அதிகாரிகள்!

அவுஸ்திரேலியாவில் பிறந்த ஐந்து வயது சிறுவனுக்கு விசா விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினருடன் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கிறார. டாக்டர் மகேடி ஹசன் பூயான் 2011 இல் மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவிற்கு வந்தார். அடுத்த ஆண்டிலே ரெபாக்கா சுல்தானா என்கிற இளம்பெண்ணை வங்கதேசத்தில் திருமணம் செய்து கொண்டு 2013 இல் ஆஸ்திரேலியாவில் பணியில் சேர்ந்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்களுக்கு அதியன் ஜீலாங் என்கிற மகன் பிறந்தான். பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு, பூயான் மற்றும் சுல்தானா, தங்களுடைய மகன் அத்யான் தலையை உயர்த்த ...

Read More »

பாம்பு பிடிப்பவரை ஆக்ரோஷமாக துரத்திய பாம்பு!

அவுஸ்திரேலியாவில் பாம்புகளைப் பிடிப்பவர் ஒருவரை கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று ஆக்ரோஷமாக துரத்திய நிலையிலும், அவர் அதற்கு ஆதரவாக பேசியுள்ளார். வெளியாகியுள்ள காணொளி ஒன்றில் அந்த பாம்பு அவரை ஆக்ரோஷமாக துரத்துவதைக் காண முடிகிறது. தரையிலிருந்து சில அடி உயரத்திற்கு எழும்பி அது அவரைத் துரத்துவதுடன், வாயைத் திறந்து வைத்துக்கொண்டு, நச்சுப் பற்கள் தெரிய அவரை கொத்தவும் பாய்கிறது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த Tony Harrison (52) என்னும் அந்த பாம்பு பிடிப்பவர், அது தன்னை அவ்வளவு ஆக்ரோஷமாக துரத்தியும், வழக்கமாக இவ்வகை பாம்புகள் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கார்களில், சமையலறைகளில் உறங்கும் அகதிகள்!

ஆஸ்திரேலியாவில் அகதிகளாக உள்ளவர்கள் மிகவும் நெருக்கமான தங்குமிடங்களில், கார்களில், ஹோட்டல் சமையலறைகளில் இரவில் தூங்க வேண்டிய வீடற்ற அவலநிலை இருந்து வருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய கத்தோலிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், முறையான மீள்குடியேற்ற வசதிகள் இல்லாததால் இந்த வீடற்ற நிலை அகதிகளிடையே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக 24 இளம் அகதிகளை பின் தொடர்ந்த ஆய்வாளர் டாக்டர் ஜென் கெளச், இந்த காலக்கட்டத்தில் அகதிகள் பல மோசமான, பாதுகாப்பற்ற, தற்காலிக இடங்களில் தூங்கியதைக் கண்டறிந்துள்ளார். சிலர் பள்ளியிலோ பணியிடங்களிலோ தங்கியுள்ளனர், ...

Read More »