அவுஸ்திரேலியாவில் பாம்புகளைப் பிடிப்பவர் ஒருவரை கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று ஆக்ரோஷமாக துரத்திய நிலையிலும், அவர் அதற்கு ஆதரவாக பேசியுள்ளார். வெளியாகியுள்ள காணொளி ஒன்றில் அந்த பாம்பு அவரை ஆக்ரோஷமாக துரத்துவதைக் காண முடிகிறது. தரையிலிருந்து சில அடி உயரத்திற்கு எழும்பி அது அவரைத் துரத்துவதுடன், வாயைத் திறந்து வைத்துக்கொண்டு, நச்சுப் பற்கள் தெரிய அவரை கொத்தவும் பாய்கிறது.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த Tony Harrison (52) என்னும் அந்த பாம்பு பிடிப்பவர், அது தன்னை அவ்வளவு ஆக்ரோஷமாக துரத்தியும், வழக்கமாக இவ்வகை பாம்புகள் இப்படி துரத்துவதில்லை என்கிறார்.
ஏற்கனவே அந்த பாம்பை சில நாய்கள் துரத்தியதாலும், பின்னர் தானும் பிடிக்க முயன்றதாலும்தான் அது அவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தது என்கிறார் அவர். அத்துடன், உண்மை நிலவரத்தைச் சொல்லப்போனால், அவுஸ்திரேலியாவில் ஆண்டொன்றிற்கு ஐந்து பேர் நாய் கடித்தும், 20 பேர் குதிரைகளாலும் உயிரிழக்கிறார்கள், ஆனால் இரண்டு பேர் மட்டுமே பாம்பு கடித்து உயிரிழக்கிறார்கள் என்கிறார்.
“https://www.dailymail.co.uk/embed/video/2037276.html”