ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச மாநாட்டில் தீவிரவாத நிதியை தடுக்க இந்தியா வலியுறுத்தல்!

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டு பவர்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.

‘தீவிரவாதத்துக்கு நிதி இல்லை’ என்ற தலைப்பிலான மாநாடு ஆஸ்தி ரேலியா தலநகர் மெல்போர்னில் நடந் தது. தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப் பதைத் தடுக்க இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்ட ‘எக்மோன்ட் குழு’ என்ற அமைப்பு 1995-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த நாடுகளைச் சேர்ந்த ‘நிதி நுண்ணறிவுப் பிரிவுகள்’ சார்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி கலந்து கொண்டார்.

அப்போது, அவர் பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார். கிஷண் ரெட்டி பேசுகை யில், ‘‘தீவிரவாதத்துக்கு எதிராக நட வடிக்கை எடுக்க உலக நாடுகள் கூட்டாக முயற்சிகள் எடுக்கும் நிலையில் சில நாடுகள் தீவிரவாதத்துக்கு மறைமுக மாக ஆதரவு அளித்து வருவது கவலை யளிக்கிறது.

தீவிரவாதத்தை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடி யாது. எல்லை தாண்டிய தீவிரவாதத் தால் இந்தியா கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. தீவிரவாதத்தை ஆதரிப் பவர்கள், நிதி திரட்டுபவர்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இந்த மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்படும் என்றும் கிஷண் ரெட்டி தெரிவித்தார்.