Home / செய்திமுரசு / அவுஸ்திரேலியமுரசு (page 5)

அவுஸ்திரேலியமுரசு

‘பாலியல் தொழில் குற்றமல்ல’- விக்டோரியாவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது!

பாலியல் தொழிலில் ஈடுபடுவது ஒரு குற்றச்செயல் அல்ல என்பதாக விக்டோரியாவில் சட்டமாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன்படி விக்டோரியாவின் ஏனைய தொழில்துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இருக்கும் உரிமைகள் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவுள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கான சட்டங்களில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருதல், பாலியல் தொழில் குறித்த பார்வையை மாற்றுதல், பாலியல் தொழிலாளர்களுக்கான சுகாதார மற்றும் நீதித்துறை சேவைகளை மேம்படுத்தல் போன்ற பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் ஒரு வார கால ஊரடங்கு அமல்

ஆஸ்திரேலியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களை டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ளது. முக்கியமாக, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஜெட் ...

Read More »

பிரியா-நடேஸ் மகள் தருணிகா தொடர்பான முறையீட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டநிலையில் தற்போது பெர்த்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா சார்பிலான மேன்முறையீடொன்றை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பிரியா, நடேஸ் மற்றும் இவர்களது மூத்த மகள் கோபிகா ஆகியோரது விசா விண்ணப்பங்கள் மற்றும் மேற்முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், நான்கு வயதுச் சிறுமி தருணிகாவின் அகதிதஞ்ச விண்ணப்பத்திற்கு procedural fairness-பிரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை காண்பிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது. மேலும் ...

Read More »

நியூசவுத்…. புதிதாக 344 பேருக்கு தொற்று

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 344 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்கள் 30 வயதுகளிலுள்ளவர் மற்றும் 90 வயதுகளிலுள்ள ஒருவர் எனவும் இவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த ஜுன் மாதம் NSW மாநிலத்தில் ஏற்பட்ட கோவிட் பரவல் காரணமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ...

Read More »

ஆஸ்திரேலிய பிரதமருக்கு குறையும் மக்களின் ஆதரவு: கருத்துக்கணிப்பில் தகவல்

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து குறைந்துவருவதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கரோனா அபாயம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவருவதாலும் தடுப்பூசி விநியோகத்தில் சுணக்கம் ஏற்பட்டதன் காரணமாகவும் மக்கள் கோபமாக உள்ளனர் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பத்திரிகையின் சார்பாக நியூஸ்போல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், “47 சதவிகித மக்கள் மட்டுமே ஸ்காட் மாரிசனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். டந்தாண்டு ஜனவரி மாதம் ...

Read More »

தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு பணம் வழங்கலாமா?

அவுஸ் ரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்க, தடுப்பூசி போடுபவர்களுக்குப் பணம் வழங்கலாம் என்ற யோசனையை labor கட்சி முன்வைத்துள்ளது. தடுப்பூசி போடுபவர்களுக்கு 300 டொலர்கள் வழங்கலாம் என்ற அந்த யோசனை மக்களை அவமதிப்பு செய்வதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விவரித்துள்ளார் ஆனால், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த அரசு அமைத்துள்ள செயற் குழுவின் தலைவர், இராணுவ அதிகாரி, இந்த யோசனையை ஆதரிக்கிறார்.

Read More »

ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவோரில் ஐந்தாவது ஆண்டாக இந்தியர்கள் முதலிடம்!

ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொள்பவர்களில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் தரவுகளின்படி, கடந்த 2020 ஜுலை முதல் 2021 ஜுன் வரையான காலப்பகுதியில், புலம்பெயர்பின்னணி கொண்ட 138,646 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றிருக்கின்றனர். இவர்களில் 24,076 பேர் இந்தியர்கள் ஆவர். இரண்டாமிடத்தில் 17,316 என்ற எண்ணிக்கையுடன் பிரிட்டிஷ் பின்னணிகொண்டோர் உள்ளனர். இதைத் தவிர பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 8,659 பேர், சீனாவைச் சேர்ந்த 7,302 பேர், ...

Read More »

ஆஸ்திரேலியர்களுக்கான பயணக் கட்டுப்பாடு மேலும் இறுக்கம்!

கொரோனா பரவலையடுத்து எல்லைக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக பின்பற்றிவரும் ஆஸ்திரேலிய அரசு, எதிர்வரும் ஆகஸ்ட் 11ம் திகதிமுதல் வெளிநாடுவாழ் ஆஸ்திரேலியர்களுக்கான பயணக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பல்வேறு காரணங்களின் நிமித்தம் வெளிநாடுகளிலே வாழ்ந்துவரும் ஆஸ்திரேலியர்கள்( ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள்) தமது உறவினரையோ குடும்பத்தையோ பார்வையிடுவதற்கோ அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக ஆஸ்திரேலியா வந்தால், அவர்கள் மீண்டும் இங்கிருந்து வெளியே செல்வதற்கு அரசின் அனுமதி பெறவேண்டும் என ...

Read More »

ஈழத்தமிழர் மெல்பனில் உணவு தவிர்ப்பு போராட்டம்

சங்கர் கணேஷ் என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மெல்பன் குடிவரவு தடுப்புமுகாமில் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இவர் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது  

Read More »

குயின்ஸ்லாந்தில் 16 பேருக்கு தொற்று

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 199 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 199 பேரில் 88 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 111 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்களில் ஆகக்குறைந்தது 50 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு மற்றும் ...

Read More »