விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,332 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மெல்பன் நகரில் ஆறாவது தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகள், இன்றிரவு 11:59ற்கு நிறைவுக்கு வருகின்றன.
வெளி நாடுகளிலிருந்து மாநிலம் வருவோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டிருக்கலாம் என்ற செய்முறை அடுத்த வாரம் பரீட்சிக்கப்படத் தொடங்குகிறது.
விக்டோரியா மாநிலத்தில் வாழும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டு விட்டார்கள் என்று பிரதமர் Scott Morrison அறிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal