ஆஸ்திரேலியாவுக்கு தப்பி சென்ற ஆப்கான் குழந்தைகள்

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தாலிபான் எனும் கடும்போக்குவாத அமைப்பின் வசம் சென்றது முதல் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல, பெண்கள் வேலைக்குச் செல்ல பல்வேறு விதமான தடைகளை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், பெற்றோர்களை இழந்த 10 ஆப்கான் குழந்தைகள் ஆப்கான்-ஆஸ்திரேலியரான மக்பூபா ராவி உதவியுடன் அந்த அமைப்பின் கொடூர பிடியிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.