அவுஸ்திரேலியமுரசு

புலம்பெயர்வதில் குடிவரவு சிக்கல்களை சமாளிப்பது என்பது காத்திருத்தல், அச்சம், மன நலன் பாதிப்பு

ஆஸ்திரேலிய குடியுரிமைக் கொண்ட சதிந்தரும் இந்தியாவில் உள்ள அவரது கணவரான சுமித்தும் மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது Partner விசாவுக்கான விண்ணப்பம் ஆஸ்திரேலியாவில் நிராகரிக்கப்பட்டு இருப்பதால், இப்படி ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்களது குடிவரவு வழக்கறிஞராக செயல்படுபவர் யுன் சென். சதிந்தர்- சுமித்திற்கு திருமணமான போதிலும், இவர்கள் பேஸ்டைம், இன்னும் சமூக ஊடகங்கள் வழியாக உரையாடிக் கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ள போதிலும், இவர்களுக்கு இடையிலான உறவு உண்மையானதல்ல என அவர்களது Partner விசா ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையால் ...

Read More »

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் தமிழர்

ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் முதல் தமிழர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வசித்து வரும்  பழனிச்சாமி ஒச்சாத்தேவர் . அவரை அரசு அதிகாரியாகவும் இந்தியா மற்றும் தமிழ் சமூகங்களின் முக்கிய தலைவராக பணிபுரிந்து வருகிறார். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தலைநகர் பிரிஸ்பேன் நகரில் 31- 10 -2020 பாராளுமன்றத் தேர்தலில் ஆஸ்திரேலியாவில் இருபெரும் கட்சிகளில் ஒன்றான ஆளும்கட்சி லேபர் கட்சியின் தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார் பழனிசாமி ஒச்சாத்தேவர். அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர்.தற்போது ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கையாளர்களை விடுவிக்கக்கோரி போராட்டம்!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நகரில் உள்ள ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களை விடுவிக்கக்கோரி நடந்த போராட்ட ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். பிரிஸ்பேன் நகரில் உள்ள கங்காரு பாய்ண்ட் சென்ட்ரல் ஹோட்டலில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 120+ அகதிகளை விடுவிக்கக்கோரி இப்போராட்டம் நடைபெற்றிருக்கின்றது. இப்போராட்டத்தினை நடத்த 2 மணிநேரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த நேரத்தை கடந்து தர்ணா செய்த 37 பேரை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற இந்த ...

Read More »

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான திட்டத்தை நினைத்தாலே….

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான திட்டத்தை நினைத்தாலே படுபயங்கரமாக இருக்கிறது என்று மைக் ஹசி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பையில் 16 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு இந்த வருடம் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்துவிட்டது. ஆனால், ஐசிசி இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான திட்டமிடுதலை நினைத்தாலே ...

Read More »

அவுஸ்திரேலியாவின் கோலா கரடிகள் அழிந்து போகக்கூடுமாம் – ஆய்வில் தகவல்

அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள ;கோலா கரடிகள் குறித்து அரசாங்கம் உடனடியாக அவற்றையும் அதன் ;வாழ்விடங்களையும் பாதுகாக்க தலையிடாவிட்டால் ;2050 ஆண்டுக்குள் அழிந்து போகக்கூடும், என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற, வறட்சி, காட்டுத்தீ போன்றன விலங்குகளுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் அவற்றின் வாழ்விடங்களில் கால் பகுதியை, சில பகுதிகளில் 81 வீதமானவை வரை அழிவடைந்துள்ளன. குறித்த பேரழிவு தீ விபத்தால் சுமார் 5,000 கோலா கரடிகள் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது என்று அறிக்கையில் ...

Read More »

எலி தின்ற நிலையில் 4 வயது சிறுமியின் அழுகிய சடலம்

அவுஸ்திரேலியாவில் குடியிருப்பு ஒன்றில் சொந்த கழிவுகளுக்கு இடையே, அழுகிய நிலையில் நான்கு வயது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே வில்லோ டன் என்ற 4 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எலிகள் தின்ற நிலையில் அழுகிய கோலத்தில் சிறுமியின் சடலம் மீட்கபட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியின் தந்தை மார்க் ஜேம்ஸ் டன்(43), மற்றும் வளர்ப்புத்தாய் ஷானன் லே வைட்(43) ஆகிய இருவர் மீதும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சிறுமி ...

Read More »

ஆட்கடத்தல் குற்றம் புரிந்ததாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் கைது!

கடந்த ஜனவரி மாதம், 6 சீனர்களை இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற விவகாரத்தில் புதிய திருப்பமாக ஆட்கடத்தல் குற்றம் புரிந்ததாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் கைதாகியுள்ளனர். முன்னதாக, கிழக்கு சீனாவின் Jiangsu மாகாணத்திலிருந்து இந்தோனேசியாவின் பாலி பகுதிக்கு புத்தாண்டு தினத்தன்று வந்த 6 சீனர்கள், திமோர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ஒருவருக்கு தலா 1000 டாலர்கள் என இந்தோனேசிய படகை விலைப்பேசி சட்டவிரோதமாக ஆஸ்திரேலிய எல்லைப்பகுதியை அடைய முயன்றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்ட சீனர்கள், ஆஸ்திரேலியாவின் மனிதர்களற்ற ...

Read More »

2023 பெண்கள் உலககோப்பை கால்பந்து – போட்டி நடத்தும் உரிமையை பெற்றன ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் 2023-ம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பெற்றுள்ளன. சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் 2023-ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. இதுதொடர்பாக நேற்று சூரிச்சில் நடந்த பிபா கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. உலகக் கோப்பையை நடத்தும் அணிகளை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா மற்று நியூசிலாந்து அணிகளுக்கு ஆதரவாக ...

Read More »

சொந்த மகளை குடியிருப்பில் இருந்து வெளியேற்ற சட்டப் போராட்டம் நடத்தும் தந்தை

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சொந்த மகளை குடியிருப்பில் இருங்து வெளியேற்ற தந்தை ஒருவர் 8 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். மகளை குடியிருப்பில் இருந்து வெளியேற்றும் பொருட்டு, அந்த தந்தை இதுவரை சுமார் 70,000 டொலர்கள் செலவிட்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த 84 வயதான பீற்றர் கிரண்டி, எஞ்சிய தமது காலத்தை முதியோர் இல்லத்தில் செலவிட திட்டமிட்டுள்ளார். அரசு சார்ந்த ஓய்வூதியம் பெறும் தகுதி அவருக்கு இல்லை என்பதால் முதியோர் காப்பகத்திற்கான செலவுகளை இவரே ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு கரோனாவுக்கு ஒருவர் பலி

ஒரு மாதத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான விக்டோரியாவில் மீண்டும் கரோனா பரவ தொடங்கியுள்ளது. சுமார் ஒரே நாளில் 20 பேருக்கு அங்கு கரோனா உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு கரோனோவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை விக்டோரியாவில் 241 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விக்டோரியா மாகாணத்தில் கரோனா இரண்டாம் ...

Read More »