அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சொந்த மகளை குடியிருப்பில் இருங்து வெளியேற்ற தந்தை ஒருவர் 8 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
மகளை குடியிருப்பில் இருந்து வெளியேற்றும் பொருட்டு, அந்த தந்தை இதுவரை சுமார் 70,000 டொலர்கள் செலவிட்டுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த 84 வயதான பீற்றர் கிரண்டி, எஞ்சிய தமது காலத்தை முதியோர் இல்லத்தில் செலவிட திட்டமிட்டுள்ளார்.
அரசு சார்ந்த ஓய்வூதியம் பெறும் தகுதி அவருக்கு இல்லை என்பதால் முதியோர் காப்பகத்திற்கான செலவுகளை இவரே ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனாலையே தமது மெல்பேர்ன் நகர குடியிருப்பை விற்க முடிவு செய்துள்ளார். ஆனால் இவரது மகள் கத்ரீனா சட்டத்தின் பாதுகாப்புடன் அந்த குடியிருப்பை தந்தையால் விற்பனை செய்ய முடியாத படி செய்துள்ளார்.
மகளின் இந்த நடவடிக்கையால் தமது வாழ்க்கை நரகமானதாக கூறும் பீற்றர் கிரண்டி, அந்த குடியிருப்பில் இருந்து மகளை வெளியேற்ற கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
மட்டுமின்றி சட்டப் போராட்டங்களுக்காக இதுவரை சுமார் 70,000 டொலர்கள் வரை செலவிட்டுள்ளதாகவும் கூறுகிறார். அந்த குடியிருப்பை தாம் வாடகைக்கு விட்டிருந்தால் தமக்கு சுமார் 200,000 டொலர்கள் வருவாய் வந்திருக்கும் எனவும் பீற்றர் தெரிவித்துள்ளார்.
ஆனால் மெல்பேர்ன் குடியிருப்பானது தமது பெற்றோர் தமக்களித்த அன்பளிப்பு என்று அவர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது
Eelamurasu Australia Online News Portal