அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள ;கோலா கரடிகள் குறித்து அரசாங்கம் உடனடியாக அவற்றையும் அதன் ;வாழ்விடங்களையும் பாதுகாக்க தலையிடாவிட்டால் ;2050 ஆண்டுக்குள் அழிந்து போகக்கூடும், என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற, வறட்சி, காட்டுத்தீ போன்றன விலங்குகளுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் அவற்றின் வாழ்விடங்களில் கால் பகுதியை, சில பகுதிகளில் 81 வீதமானவை வரை அழிவடைந்துள்ளன.
குறித்த பேரழிவு தீ விபத்தால் சுமார் 5,000 கோலா கரடிகள் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸில் காட்டுத்தீக்கு முன்னர் 36,000 வரையிலான கோலா கரடிகள் வசித்து வந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், மாநிலம் தழுவிய அளவில் காட்டுத்தீயால் ஐந்து மில்லியன் ஹெக்டேயர்களுக்கும் அதிகமான பகுதி கோலா கரடிகளின் வாழ்விடங்களை பாதித்துள்ளன.
“கோலா கரடிகளின் வாழ்விடத்தை பாதுகாக்க பலமான நில தீர்வு சட்டங்களை மீண்டும் எழுதவும், கோலாக்கள் வசிக்கும் மரங்களை தீவிரமாக பாதுகாக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவியை பெரிதும் அதிகரிக்கவும், கோலா காடுகளை வெளியேற்றுவதற்கும் தோட்டங்களுக்கு மாற்றுவதற்கும் அவுஸ்திரலிய பிரதமரை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
Eelamurasu Australia Online News Portal