அவுஸ்திரேலியமுரசு

மன்னிப்பு கோரினார் அவுஸ்திரேலியா நகரசபைத்தலைவர்!

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் டன்டினோங் நகரசபைத் தலைவரான திரு ஜிம் மெமெட்டி அவர்கள் அண்மையில்இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கை சென்றிருந்த ஜிம்அங்குள்ள சிங்களப்பேரினவாத அரசியல்வாதிகள் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிங்கள வர்த்தகர்கள் முதலானோரைச்சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்புக்களையடுத்து அவுஸ்திரேலியா திரும்பியிருந்த திரு ஜிம் இலங்கை அரசிற்கு சார்பான நிலைப்பாடுகளை எடுத்திருந்தார். இவரது இத்தகையச்செயற்பாடுகள் மெல்பேர்ணில் வதியும் ஈழத்தமிழர்கள் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஜிம் அவர்கள் எடுத்திருந்த இந்நிலைப்பாடுகள் தொடர்பாக தமிழ் ஏதிலிகள் கழகச் செயற்பாட்டாளர்கள் தமது சமூக வலையத்தளத்தில்ஜிம் ...

Read More »

அகதிகளின் அவலத்தின் அடையாளம் ஆற்றில் மிதக்கிறது!

உலகளாவிய ரீதியில் நிலவும் அகதிகள் நெருக்கடியை அடையாளப்படுத்தும் விதமாக காற்றினால் நிரப்பப்பட்ட உருவம் ஒன்று மெல்பேர்னின் Yarra ஆற்றில் மிதக்க விடப்பட்டுள்ளது. உயிர்காக்கும் அங்கி அணிந்தபடி கால்களைக் கட்டிக்கொண்டிருக்கும் அகதி ஒருவரை அடையாளப்படுத்தும் இந்த கலை வேலைப்பாடு, Belgian artist collective-இன் Schellekens , Peleman ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தாலி, சுவீடன், பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளில் பார்வைக்கு வைக்கப்பட்ட இந்த வேலைப்பாடு, தற்போது ஆஸ்திரேலியாவிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மாதம் 19 – 25ம் திகதி வரை அகதிகள் வாரம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் இதையொட்டி குறித்த ...

Read More »

மகனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமா பரிசு வழங்கிய தாயார்!

அவுஸ்ரேலியாவில் உள்ள தாய் ஒருவர் தனது மகனுக்கு ஆணுறை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய “டீன் ஏஜ் எமர்ஜென்சி கிட்”-டை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த செபி என்ற பெண்மணியின் மகன் ஜேம்ஸ். இவர் தற்போது தனது 13-ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். இவ்வளவு நாள் குழந்தை என்ற நிலைமை மாறி தற்போது டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் தனது செல்ல மகன் ஜேம்ஸிற்கு, டீன் ஏஜ் எமர்ஜென்சி கிட்டை பரிசாக வழங்கினார் செபி. அந்த ‘கிட்’டில் ஆணுறை, ரேஷர், ஷவர் ஜெல், தலைமுடிக்கு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் குடியுரிமை தொடர்பில் கூடுதல் அதிகாரம்!

குடியுரிமை தொடர்பிலான புதிய சட்ட முன்வடிவில் குடிவரவு அமைச்சருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் அதிகாரம் குடிவரவு அமைச்சர் Peter Dutton-க்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி Tribunal எனப்படும் தீர்ப்பாயத்தின் முடிவுடன் உடன்படவில்லையாயின், அந்த முடிவினை மாற்றியமைக்கும் அதிகாரம் குடிவரவு அமைச்சருக்கு உண்டு. குறித்த சட்டமுன்வடிவு நாடாளுமன்றில் அறிமுகப்படுத்தப்பட்டு செனற் அவையின் ஒப்புதலைப்பெறவேண்டிய பின்னணியில், இந்த அதிகாரம் அவசியமானது என குடிவரவு அமைச்சர் கூறியுள்ளார். Permanent residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி ...

Read More »

மலைப்பாம்பு பாதுகாப்பாக கடந்து செல்ல வீதியில் படுத்த அவுஸ்ரேலிய வாலிபர்!

அவுஸ்ரேலியாவில் மலைப்பாம்பு ஒன்று பத்திரமாக சாலையை கடக்க வேண்டும் என்பதற்காக நபர் ஒருவர் சாலையின் குறுக்கே படுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவை சேர்ந்த மேத்யூ என்பவர் கடந்த புதன்கிழமை டம்பியர் போர்ட் எனும் பகுதியில் தன் நண்பருடன் சாலையில் பேசிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது சாலையின் நடுவே சுமார் 2.5 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. அது போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அந்த மலைப்பாம்பை ஏற்றிவிடும், இதனால் பாம்பு உயிரிழக்க நேரிடும் என்று எண்ணிய அவர், ...

Read More »

சிட்னியில் இருந்து புறப்பட்ட சீன விமானத்தின் இயந்திரத்தில் ஓட்டை!

சிட்னியில் இருந்து புறப்பட்ட சீன விமானத்தின் இயந்திரத்தில் ஓட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சிட்னியில் தரையிறக்கப்பட்டது. சீனாவை சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவன பயணிகள் விமானம் ஒன்று அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு சென்றது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சீனாவின் ஷாங்காய் நகருக்கு புறப்பட்டது. ஏ-330 ஏர்பஸ் வகையை சேர்ந்த இந்த விமானத்தில் 265 பயணிகள் இருந்தனர். சிட்னியில் இருந்து புறப்பட்டு விமானம் 70 கிலோ மீட்டர் தூரம் சென்றிருந்தது. அப்போது இடதுபுற என்ஜினில் திடீரென ஓட்டை விழுந்தது. இதனால் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் 4.7 கோடி டாலர்கள் செலவில் தனிச் சிறை!

அவுஸ்ரேலியா நாட்டில் தீவிரவாதிகளுக்கு என்று 4.7 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் தனிச் சிறை கட்ட அரசு தீர்மானித்துள்ளது. அவுஸ்ரேலியா நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்தியும், தாக்குதலுக்கு திட்டம் தீட்டியும் கைதாகும் நபர்களை காலவரையின்றி சிறையில் அடைத்து வைக்கவும், ஆபத்தான தீவிரவாதிகளை கண்டதும் சுட்டுக் கொல்லவும் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகள் பரோலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதர கைதிகளுக்கு அளிக்கப்படும் அனைத்துவகை சலுகைகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால், அங்கிருக்கும் இதர கைதிகளையும் மூளைச் சலைவை செய்து தீவிராதிகளாக ...

Read More »

சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் 7 அவுஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் முன்னிலை!

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் முதல் 100 இடங்களுக்குள் அவுஸ்திரேலியாவின் 7 பல்கலைக்கழங்கள் இடம்பிடித்துள்ளன. 2018ம் ஆண்டுக்கான QS World University ranking என்ற தரப்படுத்தலிலேயே 7 அவுஸ்ரேலிய பல்கலைக்கழங்களும் இடம்பிடித்துள்ளன. இதில் 989 பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தப்பட்டிருந்தநிலையில் Australian National University 20வது இடத்தைப் பிடித்துள்ளது. இது தவிர ஆஸ்திரேலியாவின் ஏனைய பல்கலைக்கழகங்கள் எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளன என்பதை கீழே உள்ள படம் காட்டுகின்றது. இதேவேளை QS World University தரப்படுத்தலின்படி சர்வதேச ரீதியில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள பல்கலைக்கழங்களின் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் அடிமைகளாக இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்!

பணியாளர்களை அடிமைகள் போல் நடத்திய காரணத்தினால் துப்பரவுச் சேவை செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிட்னியை தளமாகக் கொண்டுள்ள இந்த துப்பரவு நிறுவனம் தனது 51 தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்களை அடிமைகள் போல் நடத்தியுள்ளது. இதற்கு அபராதமாக $447,300 டாலர்கள் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. 2011 தொடக்கம் 2013 வரை வேலை செய்த 49 பணியாளர்களுக்கு $223,000 டாலர்கள் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலாளர்களென்றும் அவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கில அறிவே இருந்துள்ளதென்றும் தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு இங்குள்ள சட்ட விதிகள் ...

Read More »

யாழ்ப்பாண தர்ஜினிக்கு அவுஸ்ரேலியாவில் கிடைத்துள்ள அங்கீகாரம்!

அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பயிற்றுநருக்கான அங்கீகாரத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் பெற்றுக்கொண்டுள்ளார். வலைபந்தாட்ட போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக செயற்பட்டு வரும் தர்ஜினி சிவலிங்கம், அவுஸ்ரேலியாவின் City West Falcons கழகத்திற்காக விளையாடி வருகின்றார். இந்நிலையில், VICTORIAN NETBALL LEAGUE போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போது வரையில் 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில் இறுதியாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும், தர்ஜினி சிவலிங்கம் விளையாடிய கழகம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த தொடரில் இதுவரையில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள தர்ஜினி சிவலிங்கம் 227 கோல்ஸ் ...

Read More »