உலகளாவிய ரீதியில் நிலவும் அகதிகள் நெருக்கடியை அடையாளப்படுத்தும் விதமாக காற்றினால் நிரப்பப்பட்ட உருவம் ஒன்று மெல்பேர்னின் Yarra ஆற்றில் மிதக்க விடப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் அங்கி அணிந்தபடி கால்களைக் கட்டிக்கொண்டிருக்கும் அகதி ஒருவரை அடையாளப்படுத்தும் இந்த கலை வேலைப்பாடு, Belgian artist collective-இன் Schellekens , Peleman ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தாலி, சுவீடன், பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளில் பார்வைக்கு வைக்கப்பட்ட இந்த வேலைப்பாடு, தற்போது ஆஸ்திரேலியாவிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இம்மாதம் 19 – 25ம் திகதி வரை அகதிகள் வாரம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் இதையொட்டி குறித்த கலை வேலைப்பாடு Immigration Museum-இல் நிறுவப்படவுள்ளது.