மன்னிப்பு கோரினார் அவுஸ்திரேலியா நகரசபைத்தலைவர்!

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் டன்டினோங் நகரசபைத் தலைவரான திரு ஜிம் மெமெட்டி அவர்கள் அண்மையில்இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கை சென்றிருந்த ஜிம்அங்குள்ள சிங்களப்பேரினவாத அரசியல்வாதிகள் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிங்கள வர்த்தகர்கள் முதலானோரைச்சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்புக்களையடுத்து அவுஸ்திரேலியா திரும்பியிருந்த திரு ஜிம் இலங்கை அரசிற்கு சார்பான நிலைப்பாடுகளை எடுத்திருந்தார்.

இவரது இத்தகையச்செயற்பாடுகள் மெல்பேர்ணில் வதியும் ஈழத்தமிழர்கள் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஜிம் அவர்கள் எடுத்திருந்த இந்நிலைப்பாடுகள் தொடர்பாக தமிழ் ஏதிலிகள் கழகச் செயற்பாட்டாளர்கள் தமது சமூக வலையத்தளத்தில்ஜிம் அவர்களின் நிலைப்பாடுகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் எதிரொலியாகடன்டினோங் நகரசபைத்தலைவர் திரு ஜிம் அவர்கள் இவ்விடயம் சம்பந்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு விருப்பம்தெரிவித்து தமிழ் ஏதிலிகள் கழகத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட தமிழ் ஏதிலிகள் கழகத்தினர்இலங்கையில் அரசபடையினரால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறலகள் வவுனியா யோசப் படைமுகாமில்தமிழ்க்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தமிழ்நிலங்கள் அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டமை மற்றும் படையினரால்வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான அறிக்கைகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக ஜிம் அவர்களுக்குஅனுப்பிவைத்திருந்தனர்.

மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்ற இந்த அறிக்கைகளை முழுமையாக வாசித்தறிந்து கொண்ட ஜிம் அவர்கள் இலங்கையில் சமகாலநிலவரங்கள் தொடர்பாக உண்மையான நிலவரங்கைளை புரிந்துகொண்டார். அதையடுத்து அவரது அழைப்புக்கிணங்க கடந்த 16-06-2017 வெள்ளிக்கிழமையன்று மாலை 5:30 மணிக்கு டன்டினோங் நகரசபைத்தலைவர் திரு ஜிம் அவர்களுக்கும் தமிழ் ஏதிலிகள்கழகத்தின் பிரதிநிதிகளுக்குமான கலந்துரையாடல் டன்டினோங்கில் இடம்பெற்றது. இந்தக்கலந்துரையாடலின் போது ஜிம்கூறியதாவது தமிழ்மக்களுக்கு இப்போதும் இத்தகைய அநீதிகளும் அக்கிரமங்களும் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படுவதுதெரிந்திருந்தால் தான் இலங்கைக்கான விஜயத்தை தவிர்த்திருப்பேன் என்றும் தற்போதைய அரசும் தமிழ்மக்கள் மீது புரிந்துவரும்ஆக்கிரமிப்புக்கள் வன்செயலகள் சித்திரவதைகள் தொடர்பாக தான் மிகவும் மனம் வருந்துவதாகவும் தான் இலங்கைத் தமிழர்களுக்குஆதரவாக இருப்பேன் என்றும் கூறியதோடு குறித்த இந்த கலந்துரையாடல் விடயங்களை தமிழ்ச்சமூகமட்டங்களுக்குஎடுத்துச்செல்லுமாறும் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் டன்டினோங் நகரசபைத்தலைவர் ஜிம் அவர்களுடனான சந்திப்பு திருப்தியாக அமைந்ததென சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான திரு குமார் நாராயணசாமி அவர்கள் தெரிவித்திருந்தார்.

unnamed (1) unnamed (2)