அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பயிற்றுநருக்கான அங்கீகாரத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் பெற்றுக்கொண்டுள்ளார்.
வலைபந்தாட்ட போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக செயற்பட்டு வரும் தர்ஜினி சிவலிங்கம், அவுஸ்ரேலியாவின் City West Falcons கழகத்திற்காக விளையாடி வருகின்றார்.
இந்நிலையில், VICTORIAN NETBALL LEAGUE போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போது வரையில் 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.
இதில் இறுதியாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும், தர்ஜினி சிவலிங்கம் விளையாடிய கழகம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த தொடரில் இதுவரையில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள தர்ஜினி சிவலிங்கம் 227 கோல்ஸ் போட்டுள்ளார்.
இந்நிலையில், அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பயிற்றுநருக்கான அங்கிகாரத்தை தர்ஜினி சிவலிங்கம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Eelamurasu Australia Online News Portal






