அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கிடைத்தும், அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை

ஆஸ்திரேலிய அரசால் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்ட சுமார் 1,200க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரை பயண விலக்கு கிடைக்காததால் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஎஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 2014-ல் Qaraqosh எனும் கிறிஸ்துவ மக்கள் அதிகமுள்ள ஈராக்கிய நகரத்திற்குள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நுழைந்தபோது, முக்லெஸ் ஹபாஷும் அவரது குடும்பத்தினரும் தங்கள் உயிருக்கு அந்நகரை விட்டு வெளியேறி இருக்கின்றனர். கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து அங்கு நிரந்தரமாக குடியேறியிருக்கின்றனர். இந்த நிலையில், தன்னைப் போல ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகள்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள 14 அகதிகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் உள்ள அகதிகள் சிலர் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட 2 அகதிகள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். “இந்த அரசாங்கம் எங்களை ஒன்பது ஆண்டுகளாக சித்ரவதை செய்வது ஏன்? எங்களுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட அகதிகளுக்கும் என்ன வித்தியாசம்? எங்களால் இனியும் தடுப்பு முகாமில் இருக்க முடியாது,” ...

Read More »

சிட்னி நகர் இரண்டு வாரங்களுக்கு முடக்கம்

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரின் அனைத்து பாகங்களிலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமுலாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா வைரஸ் திரிபு பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று மாலை 6 மணிமுதல், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இதுவரையில் 650,000 க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. 10,700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

ஆஸ்திரேலியாவின் பிரபல ‘Spelling Bee’ ஆங்கில போட்டியில் வென்ற தமிழ்ச்சிறுமி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் Prime Minister’s Spelling Bee தேசிய போட்டியில் தமிழ்ச் சிறுமியான தீக்சிதா கார்த்திக் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு வயது 11.

Read More »

“கோபிகா-தருணிகாவுக்கு பதிலாக Jane-Sally என்றிருந்தால் அரசு விசா தந்திருக்கும்”

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா-நடேஸ் தம்பதியரின் இரு மகள்களான கோபிகா மற்றும் தருணிகாவுக்கு Jane மற்றும் Sally என்ற பெயர்கள் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அரசு அவர்களை வேறுவிதமாக நடத்தியிருக்கும் என முன்வைக்கப்பட்ட விமர்சனத்தை குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். ஆஸ்திரேலிய National கட்சியின் தலைவராகவும் துணைப் பிரதமராகவும் மீண்டும் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னதாக கருத்துவெளியிட்ட Barnaby Joyce, பிரியா குடும்பத்தை அரசு நடத்தும் விதம் தொடர்பில் விமர்சனத்தை வெளியிட்டதுடன், ஆஸ்திரேலியாவில் பிறந்த இரு பெண் குழந்தைகளுக்கும் Jane மற்றும் Sally என்ற பெயர்கள் இருந்திருந்தால் அவர்களை வேறொரு ...

Read More »

தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசா வழங்கிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் பல ஆண்டுகள் கழித்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பிரியாவும் நடேசலிங்கமும் வேலைச் செய்ய, கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள். இக்குடும்பத்துக்கு மருத்துவ உதவிகள், பிற உதவிகள் மட்டுமின்றி அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

அகதியாக ஆஸ்திரேலியா சென்று பேருந்து ஓட்டும் தமிழ்ப்பெண்

ஈழத்தில்  இருந்து அகதியாகச் சென்ற பருத்தித்துறையைச்  சேர்ந்த பெண் ஒருவர் அவுஸ்ரேலியா நாட்டில் பொதுப் போக்குவரத்து சாரதியாக பணிபுர்ந்து வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பருத்தித்துறையைச் சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் என்பவரே இவ்வாறு பணிபுரிந்து வருகிறார். பெற்றோர்கள் இல்லாத நிலையில் அவரின் திருமண வாழ்கையும் 3 வருட காலத்தில் முறிவடைந்த நிலையில் தனது 3 வயதுக் குழந்தையுடன் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்குச் சென்றுள்ளார். அவுஸ்ரேலியாவில் 5 வருடங்கள் கழித்து விசா கிடைத்ததும் தனது கையில் கிடைக்கும் வேலைகளைச் செய்து பணம் சாம்பாதித்தார். அதன் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான தொழிற்பட்டியலில் புதிதாக 22 தொழில்கள் இணைப்பு!

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Priority Migration Skilled Occupation List (PMSOL)- முன்னுரிமை  அடிப்படையிலான தொழிற்பட்டியலில் புதிதாக 22 தொழில்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Alex Hawke இன்று அறிவித்தார். இதையடுத்து Priority Migration Skilled Occupation List-இல் உள்ள மொத்த தொழில்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. Priority Migration Skilled Occupation List என்பது மிக அத்தியாவசிய தொழில்துறைகளுக்கான பணியாளர்களை  முன்னுரிமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு வரவழைப்பதற்கான பொறிமுறையாகும். Priority Migration Skilled Occupation List-இல் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள தொழில்களின் விவரங்கள் வருமாறு: Accountant ...

Read More »

ஆஸ்திரேலி தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் தாங்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மனுஸ் மற்று நவுருத்தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் எனக் கூறப்படுகின்றது. “நாங்கள் இங்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டோம். ஆனால் எந்த காரணமுமின்றி எங்களைத் தடுப்பிலேயே வைத்திருக்கின்றனர்,” என ஓர் அகதி தெரிவித்திருக்கிறார்.

Read More »

உடல்நலம் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிச் சிறுமிக்கான சிகிச்சை நிறைவு

குருதி தொற்று காரணமாக கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் இருந்து ஆஸ்திரேலிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதிகளின் குழந்தையான தருணிகாவுக்கு சிகிச்சை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த பிரியா- நடேசலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கை  நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களும் அவர்களது இரு குழந்தைகளும் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரியா- நடேசலிங்கத்தின் இளைய மகள் தருணிகா கடந்த ஜுன் 7ம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2012 யில் ...

Read More »