ஆஸ்திரேலிய அரசால் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்ட சுமார் 1,200க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரை பயண விலக்கு கிடைக்காததால் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஎஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
2014-ல் Qaraqosh எனும் கிறிஸ்துவ மக்கள் அதிகமுள்ள ஈராக்கிய நகரத்திற்குள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நுழைந்தபோது, முக்லெஸ் ஹபாஷும் அவரது குடும்பத்தினரும் தங்கள் உயிருக்கு அந்நகரை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து அங்கு நிரந்தரமாக குடியேறியிருக்கின்றனர்.
இந்த நிலையில், தன்னைப் போல ஆபத்தில் உள்ள பெற்ற ஈராக்கிய கிறிஸ்துவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
“எங்களுக்கு நிரந்தர வதிவிடத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஆனால் ஆஸ்திரேலிய அரசால் இன்னும் உதவ செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே நாங்கள் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கோரியவர்களை கைவிட்டு விட மாட்டோம்,” என முக்லெஸ் ஹபாஷ் ஆஸ்திரேலியாவுக்கு வர காத்திருக்கும் தனது உறவினரிடம் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 2020 முதல் மே 2021 வரை, ஆஸ்திரேலியாவுக்குள் வர 1,826 பயண விலக்குக் கோரி விண்ணப்பித்ததில் 1,251 அகதிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சுமார் 30 சதவீதமான அகதிகளுக்கு மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் வருவதற்கான பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா கால பயணக்கட்டுப்பாடுகளில் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கிடைத்தும், அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத ஏற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.