ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான தொழிற்பட்டியலில் புதிதாக 22 தொழில்கள் இணைப்பு!

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Priority Migration Skilled Occupation List (PMSOL)- முன்னுரிமை  அடிப்படையிலான தொழிற்பட்டியலில் புதிதாக 22 தொழில்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Alex Hawke இன்று அறிவித்தார்.

இதையடுத்து Priority Migration Skilled Occupation List-இல் உள்ள மொத்த தொழில்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

Priority Migration Skilled Occupation List-இல் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள தொழில்களின் விவரங்கள் வருமாறு:

  • Accountant (General) (221111)
  • Accountant (Taxation) (221113)
  • Accountant (Management) (221112)
  • External Auditor (221213)
  • Internal Auditor (221214)
  • Electrical Engineer (233311)
  • Civil Engineer (233211)
  • Structural Engineer (233214)
  • Geotechnical Engineer (233212)
  • Transport Engineer (233215)
  • Mining Engineer (233611)
  • Petroleum Engineer (233612)
  • Surveyor (232212)
  • Cartographer (232213)
  • Other Spatial Scientist (232214)
  • Medical Laboratory Scientist (234611)
  • Orthotist / Prosthetist (251912)
  • Multimedia Specialist (261211)
  • Analyst Programmer (261311)
  • Software and Applications Programmers (261399)
  • ICT Security Specialist (262112)
  • Chef (351311)

குறித்த மாற்றம் தொடர்பில் தொழில்வழங்குநர்கள், வணிக தலைவர்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் போன்றவற்றுடன் அரசு இணைந்து செயற்படுவதாகவும் அமைச்சர் Alex Hawke தெரிவித்தார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள Skilled Occupation Listஅடிப்படையில் தாக்கல்செய்யப்படும் விசா விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் என்றபோதிலும், Priority Migration Skilled Occupation List-இன் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கோவிட் பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக ஆஸ்திரேலியாவுக்குள் வெளிநாட்டு தொழிலாளர்கள் வருவது கடினமாகவுள்ள சூழலில், இந்தநிலை அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து மாற்றமடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இவ்வாறு Priority Migration Skilled Occupation List-இன் கீழ் வேலையொன்றைப்பெற்று ஆஸ்திரேலியா வருபவருக்குரிய தனிமைப்படுத்தல் செலவு அவரையோ அல்லது அவரை பணிக்கமர்த்தவுள்ள நிறுவனத்தையோ சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.