அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலிய உயர் தூதராக ஒருநாள் பதவி வகித்த கிராமத்துப் பெண்!

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்களின் ஆதிக்கத்துக்கு இடையே பெண் கல்வி, பெண் சமத்துவம் போன்றவற்றுக்காக பாடுபடும் கிராமத்துப் பெண் ஆஸ்திரேலிய உயர் தூதராக ஒருநாள் மட்டும் பதவி வகித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரி சிங். 22 வயது இளம்பெண்ணான பாரி, நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வாழும் பெண் குழந்தைகளின் கல்வி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் அதிகாரத்துக்காக சேவையாற்றியதன் மூலம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளை சமாளிக்கும் யுக்தி, அவசர உதவி எண்கள் ஆகியவற்றையும் ...

Read More »

ஆஸ்திரேலிய ஆவியோடு திருமணம்!

பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தொலைக்காட்சியில் வெளியிட்ட கருத்து, பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. என்ற 30 வயதுடைய பெண் ஒருவர், அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில், தான் இதுவரை 20 ஆவிகளுடன் உறவு கொண்டதாவும், அதில் அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் சந்தித்த ஆவியைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், திடுக்கிடும் அதிர்ச்சி தகவலை அசால்ட்டா தெரிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.இவரது இந்த பேய்க் கதை நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் பலத்த அதிர்ச்சி. amethyst Realm குறித்த பேட்டி நிகழ்ச்சியில் மிகவும் சர்வ சாதாரணமாக பேசுவதும், ...

Read More »

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு!

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது என தெண்டுல்கர் கூறியுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மும்பையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கடந்த கால ஆஸ்திரேலிய அணியையும் தற்போதுள்ள அணியையும் பார்த்தால் இந்தியாவுக்கே வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் அவர்கள் (ஆஸ்திரேலியா) உயர்ந்த நிலையில் இருந்தனர். அனுபவமிக்க வீரர்கள் இருந்தனர். ஆனால் தற்போது அனுபவம் குறைந்த வீரர்கள் ...

Read More »

துஸ்பிரயோகம் செய்ய முயன்றவனை குத்திக்கொன்ற பெண்!

அவுஸ்திரேலியாவில் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நபரை குத்தி கொலை செய்த பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த கிராண்ட் காசர் (51) என்ற நபர் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, கடந்த 2015ம் ஆண்டு ரோக்ஸான் பீட்டர்ஸ் (35) என்ற பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காசரின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவருடை மர்ம உறுப்பு, உணவுக்குழாய் மற்றும் நெஞ்சுப்பகுதி போன்ற இடங்களில் 60 கத்திக்குத்து காயங்கள் இருப்பதை கண்டறிந்தனர். ...

Read More »

21 வயது குறைவான வாலிபரை மணக்க போகும் 9 குழந்தைகளின் தாய்!

அவுஸ்திரேலியாவில் 9 குழந்தைகளுக்கு தாயான பெண் தன்னை விட 21 வயது குறைவான இளைஞரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார். டினா ஜாக்சன் (45) என்ற பெண்ணுக்கு திருமணமாகி 9 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிராண்டன் (24) என்ற இளைஞரை கடந்த 2013-ல் டினா சந்தித்துள்ளார். இதையடுத்து இருவரும் நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர். பின்னர் இது காதலாக மாறியுள்ளது. பிரண்டனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக டினா மீண்டும் கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அழகான குழந்தையை சமீபத்தில் பெற்றெடுத்தார் டினா. தனது காதலனான பிராண்டனை விரைவில் டினா திருமணம் செய்யவுள்ளார். ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. NSW மாநிலத்தில் புதிதாக 5 மொழிகளை எந்த பள்ளிக்கூடத்திலும் கற்கலாம் என NSW மாநில அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த 5 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக தமிழ் மொழிக்கான பாடத்திட்டத்தை NSW மாநில கல்வித்துறை வடிவமைத்துள்ளது. அத்தோடு இந்த பாடத்திட்டத்தை அரசு அங்கீகரிக்கும் முன் இந்த பாடத்திட்டம் குறித்து தமிழ் சமூகம் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமெனவும் அரசு கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More »

அவுஸ்திரேலியாவில் 6 வயது சிறுமிக்கு சிறுவர்களால் நேர்ந்த ஆபத்து!

தொலைபேசியில் ஆபாச காட்சிகளை தொடர்ந்து பார்த்து வரும் இரண்டு சிறுவர்கள் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விவகாரத்தில் தொடர்புடைய சிறார்கள் இருவரும் 10 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க முடியாது இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் சைபர்-பாதுகாப்பு நிபுணரான Susan McLean இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடன் பேசியுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகம் ஏன் காவல் முறையிடம்  அப்போது முறைப்பாடு அளிக்கவில்லை என அவர் ...

Read More »

அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அகதிகளுக்கு அங்கு கடின வாழ்வு

நவுறு மற்றும் மனுஸ் தடுப்பில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அகதிகள் அங்கு கடின வாழ்வை எதிர்நோக்கியிருப்பதாக அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறியுள்ளார். வேலையை தேடுவது போன்ற அத்தியாவசிய செயற்பாடுகளில் பெரும் சவால்களுக்கு முகம் கொடுப்பதாக நவுறுவிலுள்ள தமது நண்பர்களுக்கு கூறியதாக என்று பீட்டர் டட்டன் மேலும் கூறியுள்ளார். நவுறு தீவிலிருந்து மூன்றாவது நாடொன்றுக்கு சென்று அங்கு குடிமயர்வதற்கு சம்மதித்த நூற்றுக்கணக்கானவர்கள் இதுவரை பல தொகுதிகளாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு படகு ...

Read More »

விபத்தில் சிக்கிய இலங்கையர்கள்! நடந்த விபரீதம் என்ன?

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் அது தொடர்பான மேலதிக தகவல்களை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் Canberra பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இலங்கை உணவு சமைக்க முயற்சித்த 4 சமையல் கலைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்வு ஒன்றிற்காக சமைக்க ஆயத்தமாகிய போது ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு காரணமாக சமையல் கலைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 4 பேரும் Canberra வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வெடி விபத்து: 4 இலங்கையர்கள் படுகாயம்!

அவுஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் இடம்பெற்ற வெடி விபத்தில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உணவம் ஒன்றில் இடம்பெறவிருந்த நிகழ்வொன்றிற்காக உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு இலங்கையர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த உணவகத்திலிருந்த எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்தமை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கான்பராவிலுள்ள உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு காயமடைந்தவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »