நவுறு மற்றும் மனுஸ் தடுப்பில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அகதிகள் அங்கு கடின வாழ்வை எதிர்நோக்கியிருப்பதாக அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறியுள்ளார்.
வேலையை தேடுவது போன்ற அத்தியாவசிய செயற்பாடுகளில் பெரும் சவால்களுக்கு முகம் கொடுப்பதாக நவுறுவிலுள்ள தமது நண்பர்களுக்கு கூறியதாக என்று பீட்டர் டட்டன் மேலும் கூறியுள்ளார்.
நவுறு தீவிலிருந்து மூன்றாவது நாடொன்றுக்கு சென்று அங்கு குடிமயர்வதற்கு சம்மதித்த நூற்றுக்கணக்கானவர்கள் இதுவரை பல தொகுதிகளாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal