பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தொலைக்காட்சியில் வெளியிட்ட கருத்து, பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. என்ற 30 வயதுடைய பெண் ஒருவர், அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில், தான் இதுவரை 20 ஆவிகளுடன் உறவு கொண்டதாவும், அதில் அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் சந்தித்த ஆவியைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், திடுக்கிடும் அதிர்ச்சி தகவலை அசால்ட்டா தெரிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.இவரது இந்த பேய்க் கதை நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் பலத்த அதிர்ச்சி.
amethyst Realm குறித்த பேட்டி நிகழ்ச்சியில் மிகவும் சர்வ சாதாரணமாக பேசுவதும், இந்த நிகழ்ச்சியை தொகுத்த இரண்டு தொகுப்பாளர்கள் கவனமாக கேள்விகளை கேட்பதும் பார்வையாளர்களுக்கு இன்னும் இந்தப் பேட்டி நிகழ்ச்சியை உன்னிப்பாக பார்க்க வைத்தது.
இதில், Amethyst Realm மேலும் தெரிவிக்கும்போது, சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சந்தித்த ஆவியுடன் தான் பேசியதாகவும், அப்போது திருமண ஆசையை அந்த ஆவி வெளிப்படுத்தியது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் கூறியதில் பலரும் வெலவெலத்துப் போயுள்ளனர்.
அத்துடன் பிரிட்டன் ஆவி ஒன்று தொடர்பில் தெரிவிக்கையில், “இந்த ஆவிக்கு முழங்கால்கள் இல்லை, ஆனால் முதன் முறையாக அவர் என்னிடம் பேசினார், அவர் குரல் அழகானது, ஆழமானது, கவர்ச்சியானது ” என்று இன்னும் இன்னும் பேய்க் கதையை நீட்டிக்கொண்டே போகிறார்.
Amethyst Realmக்கு மனரீதியான குழப்பமா ? அல்லது விளையாட்டாய் பேசுகிறாரா? என்று பலரும் குழம்பி போய்விட்டார்கள்.
இந்த பேட்டியில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தனக்கும் ஆவிகளுக்கு இடையேயான உறவை குடும்பத்தினரும் நண்பர்களும் ஏற்றுக் கொண்டுவிட்ட நிலையில், கிறித்துவ முறைப்படி அல்லாத பழங்குடி முறையில் திருமண ஏற்பாடுகள் அவுஸ்திரேலியா ஆவிக்கும் தனக்கும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், சாதாரண மனிதர்களை விட ஆவிகளுனுடனான தொடர்பு தனக்கு உண்மையான உற்சாகத்தை அளிப்பதாக அவர் மேலும் ஒரு குண்டை தூக்கிப் போட்டுளளார்.