துஸ்பிரயோகம் செய்ய முயன்றவனை குத்திக்கொன்ற பெண்!

அவுஸ்திரேலியாவில் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நபரை குத்தி கொலை செய்த பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த கிராண்ட் காசர் (51) என்ற நபர் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, கடந்த 2015ம் ஆண்டு ரோக்ஸான் பீட்டர்ஸ் (35) என்ற பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

காசரின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவருடை மர்ம உறுப்பு, உணவுக்குழாய் மற்றும் நெஞ்சுப்பகுதி போன்ற இடங்களில் 60 கத்திக்குத்து காயங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட காசர், தன்னுடன் உறவுக்கு சம்மதிக்கவில்லை என்றால் உன்னுடைய மகளை கொடுமைப்படுத்துவேன் என ரோக்ஸானை மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரோக்ஸான், சமையலறையில் இருந்த கத்தியை கொண்டு காசரை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவனுடைய உடலை கயிற்றால் கட்டி தன்னுடைய காரின் பின்பக்கத்தில் வைத்து சாலை ஓரம் தூக்கி எறிந்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிமன்றம், ரோக்ஸானுக்கு 10 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் 2 ஆண்டுகள் கடந்த பின்னர் ரோக்ஸான் பரோலில் வெளிவரலாம் எனவும் தெரிவித்துள்ளது.