அவுஸ்திரேலியா இலங்கையை போல வறுமையில் சிக்கும் ஆபத்துள்ளது என அந்த நாட்டின் செல்வந்தப்பெண்மணியொருவர் எச்சரித்துள்ளார். பெரும் செலவீனங்கள் அதிகளவு அரச கட்டுப்பாடுகள் காரணமாக ஆர்ஜென்டீனா இலங்கை போல அவுஸ்திரேலியாவும் செழிப்பான நிலையிலிருந்து வறுமைக்குள் தள்ளப்படு;ம் என 31 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை கொண்ட அவுஸ்திரேலியாவின் செல்வந்தப்பெண்மணி ஜினா ரைன்ஹேர்ட் தெரிவித்துள்ளார். தேசத்தின் செல்வத்தை பாதுகாப்பதற்காக சோசலிசத்தின் அழிவுவேலைகளில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு அவுஸ்திரேலிய மக்கள் தயாராகயிருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்திரேலியா நாளை என்ற நூலில் அவர் இதனை எழுதியுள்ளார்விரைவில் வெளியாகவுள்ள ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
கடல் கடந்த தடுப்பு முகாம் முறையைத் தொடரும் ஆஸ்திரேலிய அரசு
ஆஸ்திரேலியா- நவுரு இடையிலான ஒப்பந்தம் தஞ்சக் கோரிக்கையாளர் பரிசீலனை முறையை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் எனக் கூறியுள்ளார் நவுரு ஜனாதிபதி லைனெல் ஐங்கிமே. “ஆஸ்திரேலியாவால் நவுருவுக்கு கொண்டு வரப்படும் சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக கையாள்வதற்கான செயல்முறை உருவாக்கப்படும்,” என நவுரு ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
Read More »என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில் உள்ளோம்!
கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன. 2018ல் இத்தமிழ் அகதி குடும்பம் இலங்கைக்கு வலுக்கட்டாயமாக நாடுகடத்த ஆஸ்திரேலிய திட்டமிட்டிருந்த நிலையில், அந்நடவடிக்கை கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ்வதற்கான தொடர் சட்டப் போராட்டத்தில் உள்ளது. கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட ...
Read More »சர்வதேச பொருளாதார உடன்படிக்கையொன்றில் சீனா இணைந்துகொள்வதை கடுமையாக எதிர்க்கப்போவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது!
சர்வதேச பொருளாதார உடன்படிக்கையொன்றில் சீனா இணைந்துகொள்வதை கடுமையாக எதிர்க்கப்போவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பதற்றமடைந்துள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது டிரான்ஸ் பசுபிக் ஒத்துழைப்பிற்கான முழுமையான முற்போக்கான உடன்படிக்கையில் இணைந்துகொள்வதற்கு சீனா முயன்றுவருகின்றது. எனினும் ஆசிய நாட்டிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான முறுகல்நிலை காரணமாக சீனா பார்லி மற்றும் வைன் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் வரையில் இந்த உடன்படிக்கையில் சீனா இணைந்துகொள்வதை எதிர்க்கப்போவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன்தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள நாடுகளுடன் தான் இணக்கப்பாட்டுடன் ...
Read More »அகதிகளை தடுத்து வைக்க மீண்டும் ஒப்பந்தம்
ஆஸ்திரேலியா- நவுருத்தீவு இடையே கையெழுத்தானது ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயல்பவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்கள் நவுருத்தீவில் உள்ள தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்பதை மீண்டும் ஆஸ்திரேலியா- நவுருத்தீவு இடையே கையெழுத்தான ஒப்பந்தம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2012ல் நவுருத்தீவினை கடல் கடந்த தஞ்சக்கோரிக்கை பரிசீலனை மையமாக பயன்படுத்த தொடங்கிய ஆஸ்திரேலியா, அத்தீவினை தொடர்ந்து தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் மையமாக பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை நவுருவுடன் கையெழுத்திட்டுள்ளது. “சட்டவிரோதமாக படகில் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் அல்லது நவுருத்தீவுக்கு அனுப்பப்படுவார்கள். ஆனால், ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் ...
Read More »ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆஸ்திரேலியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மெல்போர்ன் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்ஸ்பீல்டு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அங்குள்ள சேப்பல் தெருவில் உள்ள ஒரு கட்டிடம் சேதம் ...
Read More »கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வாகாது!-ஆஸ்திரேலிய மாநிலம்
ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அங்குள்ள மாநிலங்கள், பிரதேசங்கள் ஊரடங்கினால் தொற்றினை ஒழிக்க முடியாது எனும் எண்ணத்திற்கு வந்துள்ளன. இதனை தொற்று பரவலுக்கு இடையில் வாழ்க்கையை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய மாநில அரசுகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் தொகையில் 25 சதவீதமானோரை கொண்டுள்ள விக்டோரியா மாநிலம், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 70 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசி செலுத்திய பின்னர், ஊரடங்கினை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. வரும் அக்டோபர் 26ம் தேதிக்குள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா ...
Read More »தியாகி தீலீபனின் 34ம் ஆண்டு நினைவஞ்சலி
தியாகி தீலீபனின் 34ம் ஆண்டு நினைவஞ்சலி
Read More »ஆஸி.யில் ஊரடங்கை எதிர்த்து மக்கள் போராட்டம்- பெப்பர் ஸ்பிரே தெளித்து விரட்டியடித்த காவல் துறை
ஊரடங்கிற்கு எதிரான போராட்டங்களின்போது பொது மக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஆஸ்திரேலியாவில் சிட்னி, கான்பெர்ரா, மெல்போர்ன் போன்ற நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த நகரங்களில் மட்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய காரணங்கள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அவ்வகையில், ...
Read More »அமைச்சரவையிலிருந்து Christian Porter விலகினார்
ABC ஊடகவியலாளர் Louise Milligan மற்றும் அவர் சார்ந்த ABC நிறுவனத்திற்கு எதிராக மான நட்ட வழக்கு தொடர்வதற்கு நன்கொடையாக பணம் பெற்றதை ஏற்றுக் கொண்ட Christian Porter, அமைச்சரவையிலிருந்து இன்று விலகினார். தொழிற்துறை மற்றும் அறிவியல் துறை அமைச்சராகக் கடமையாற்றிய Christian Porterருக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் பிரதமர் Scott Morrison கூறவில்லை. அதே வேளை, இது குறித்து விரிவாக ஆராயும்படி பிரதமர் பணிமனை தலைவர் Phil Gaetjens அவர்களைக் கேட்டுள்ளார். நிதி வழங்கியவர் யார் என்று Christian Porter அடையாளப் படுத்த ...
Read More »