சர்வதேச பொருளாதார உடன்படிக்கையொன்றில் சீனா இணைந்துகொள்வதை கடுமையாக எதிர்க்கப்போவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பதற்றமடைந்துள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது
டிரான்ஸ் பசுபிக் ஒத்துழைப்பிற்கான முழுமையான முற்போக்கான உடன்படிக்கையில் இணைந்துகொள்வதற்கு சீனா முயன்றுவருகின்றது.
எனினும் ஆசிய நாட்டிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான முறுகல்நிலை காரணமாக சீனா பார்லி மற்றும் வைன் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் வரையில் இந்த உடன்படிக்கையில் சீனா இணைந்துகொள்வதை எதிர்க்கப்போவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன்தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள நாடுகளுடன் தான் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதை நிரூபிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் வர்த்தக துறை அமைச்சர் டான் டெஹன் ஸ்கொட்மொறிசன் அரசாங்கத்துடன் தனது உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை சீனா ஆரம்பிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிபிடிபிபி உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ள நாடுகள் புதிதாக இணையவுள்ள நாடு ஒப்பந்தத்தின் கீழான தனது கடப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை வெளிப்படுத்தவேண்டும் என விரும்புகின்றார்கள் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் டெஹான் வார வீக்என்ட் அவுஸ்திரேலியனிற்கு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டிய அவசியமான விடயங்கள் உள்ளன என நாங்கள் சீனாவிற்கு தெரிவித்துள்ளளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் வர்த்தகத்தை சீனா புறக்கணிப்பதால் அவுஸ்திரேலியாவின் ஏற்றுமதிக்கு 20 பில்லியன் டொலர் நஸ்டமேற்பட்டுள்ளதுடன் இருநாடுகள் மத்தியிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட் உடன்படிக்கையில் இணைந்துகொள்வதற்காக புதிய நாடுகள் விடுக்கும் வேண்டுகோளை நியுசிலாந்தே கையாள்கின்றது சிங்கப்பூர் ஜப்பான் அவுஸ்திரேலிய நாடுகள் விண்ணப்பத்தினை ஆராய்கின்றன.
சீனாவின் விண்ணப்பத்தினை ஏற்றுக்கொள்வது அவுஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் காணப்படும் பதற்றத்தை தணிக்க உதவலாம் என சீனா மற்றும் உலகமயமாக்கலிற்கான நிலையத்தின் இயக்குநர் வாங் ஹ_ய்யாவோ தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா சமீபத்திலேயே அமெரிக்காவுடனான பிராந்திய கட்டமைப்பில் இணைந்துகொண்டுள்ளதால் சீனாவுடனான அவுஸ்திரேலியாவின் உறவை வலுப்படுத்த இது உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற் முக்கியத்துவம் வாய்ந்த அவுகஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளமை குறித்து ஸ்கொட்மொறிசன் அறிவித்த தருணத்திலேயே சீனா சிபிடிபிபி உடன்படிக்கையில் இணையவிருப்பம் வெளியிட்டுள்ளமை குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பிட்ட உடன்படிக்கையின் கீழ் அவுஸ்திரேலியாவிற்கு 8 நீர்மூழ்கிகள் கிடைக்கவுள்ளன. முதல் தடவை அவுஸ்திரேலியாவிற்கு இந்த தொழில்நுட்பம் கிடைத்துள்ளது அது விசேட ஏற்பாடு என ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.
எந்த தலைவரும் சீனாவை பற்றி குறிப்பிடாத போதிலும் சீனா தன்னை உறுதிப்படுத்தி வருவதும் அதன் பாரிய இராணுவ கட்டமைப்பு குறித்து மேற்குலகு கரிசனை கொண்டுள்ளது.
சீனா அரசாங்கத்தின் ஊதுகுழலான குளோபல்டைம்ஸ் செய்தி இணையத்தளம் கடுமையாக தாக்கும் கட்டுரையொன்றை வெளியிட்டதுடன் அவுஸ்திரேலியா மீதான அணுவாயுத தாக்குதல் குறித்து எச்சரித்திருந்தது.