ABC ஊடகவியலாளர் Louise Milligan மற்றும் அவர் சார்ந்த ABC நிறுவனத்திற்கு எதிராக மான நட்ட வழக்கு தொடர்வதற்கு நன்கொடையாக பணம் பெற்றதை ஏற்றுக் கொண்ட Christian Porter, அமைச்சரவையிலிருந்து இன்று விலகினார்.
தொழிற்துறை மற்றும் அறிவியல் துறை அமைச்சராகக் கடமையாற்றிய Christian Porterருக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் பிரதமர் Scott Morrison கூறவில்லை. அதே வேளை, இது குறித்து விரிவாக ஆராயும்படி பிரதமர் பணிமனை தலைவர் Phil Gaetjens அவர்களைக் கேட்டுள்ளார்.
நிதி வழங்கியவர் யார் என்று Christian Porter அடையாளப் படுத்த தவறியதால், தனிப்பட்ட ஆதாயம் தேடி நிதி வழங்கப்பட்டதா (Conflicts of interest) என்ற சந்தேகம் இருப்பதால் அவர் பதவி விலக முடிவெடுத்ததாக பிரதமர் மேலும் கூறினார்.
அமைச்சரவையின் தரத்தை நிலை நிறுத்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கை
என்பதால், அவரது பதவி விலகல் கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டேன் என்று பிரதமர் Scott Morrison கூறினார்.
Christian Porterரின் அமைச்சரவை பொறுப்புகளை, எரிசக்தி அமைச்சர் Angus Taylor தற்காலிகமாக பொறுப்பேற்கிறார்.