அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பில் உள்ள அகதிகளின் நிலை என்ன?

பப்பு நியூ கினியா எனும் தீவு நாட்டில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ள அகதிகளின் பாதுகாப்பை ஆஸ்திரேலிய அரசு உறுதிச் செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் சட்ட மையம் வலியுறுத்தியுள்ளது. பப்பு நியூ கினியாவில் கொரோனா தொற்று பரவினால் அது அந்நாட்டில் உள்ள சுகாதார கட்டமைப்பை சீர்குலைக்கூடும் என பப்பு நியூ கினியாவின் பெருந்தொற்று கட்டுப்பாட்டாளர் எச்சரித்துள்ள நிலையில் அங்குள்ள அகதிகளின் நிலைக்குறித்து அச்சம் எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், பப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலிய ...

Read More »

இரகசிய செயற்பாடு அம்பலம்! அவுஸ்திரேலிய தமிழர் பேரவை வெளியேறியது!!

2009 இற்கு பின்னர், சனநாயக வழியில் பெருங்கட்டமைப்பாக உருவாக்கி உலகத்தமிழர் பேரவையாக (GTF) செயற்படுவது நல்லது என தீர்மானித்து புலம்பெயர்ந்த தமிழர்கள் கனதியாக வாழும் நாடுகளில் கிளை அமைப்புகளை நிறுவி, அவுஸ்திரேலியாவில் உருவான ATC உம் அதனுடன் இணைந்தது. ஆனால் சில வருடங்களில், இம்மானுவேல் பாதிரியாரும் சுரேந்திரனும் சுமந்திரனுடன் இணைந்து அதன் நோக்கத்தை திசைதிருப்பி, சிறிலங்கா அரசுக்கு வெள்ளையடிக்க தலைப்பட்டனர். இப்போது, இன்றைய தேர்தலில் கூட்டமைப்பை ஆதரிக்குமாறும் குறிப்பாக சுமந்திரனை தெரிவு செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த முடிவை மேற்குறிப்பிட்ட மூவரின் சதி எனவும். ...

Read More »

ஆஸ்திரேலியாவில் 19 ஆயிரம் அகதிகள் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் கொரோனா காரணமாக ஏற்பட்ட மந்தநிலையினால் தற்காலிக விசாக்களில் உள்ள 19,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் தெரிவித்துள்ளது. அத்துடன் 14,000 பேர் வீடற்ற நிலைக்கு செல்லக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் Bridging Visas எனப்படும் இணைப்பு விசாக்களில் உள்ளவர்களும் தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள அகதிகளும் வேலைகளை இழந்தால் அவர்கள் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும் எனச் சொல்லப்படுகின்றது. இவர்களுக்கு அரசால் வழங்கப்படும் JobSeeker, JobKeeper பண உதவிகள் எதும் வழங்கப்படுவதில்லை. 2012ம் ஆண்டு ஈரானிலிருந்து ...

Read More »

பிரியா – நடேசன் குடும்பம் தொடர்பிலான அவுஸ்திரேலிய அமைச்சர் டட்டனின் கூற்றுக்கு சட்டத்தரணி பதிலடி

பிரியா ; நடேசன் குடும்பத்தினரால் ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு கோடி டொலர் செலவாகியுள்ளது என்றும், இந்தப்பணம் நாட்டு முன்னேற்றத்துக்காக பயன்படுத்தப்படவேண்டியது என்றும், வாய்ப்புக்கள் அனைத்தும் தீர்ந்துபோன பிறகும் நாடு திரும்புவதற்கு அடம்பிடிக்கும் ப்ரியா நடேசன் குடும்பத்தினால் நாட்டு மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது என்றும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பிரியா ; நடேசன் குடும்பத்தினரின் சார்பாக வழக்கை முன்னெடுத்துவரும் சட்டத்தரணி அவ்வளவு  பெருந்தொகைப்பணத்தை செலவுசெய்து அந்தக்குடும்பத்தினை எப்படியாவது நாட்டைவிட்டு துரத்துவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருபவர் பீற்றர் டட்டனே ...

Read More »

மருத்துவமனையிலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டார் பிரியா

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பேர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த தமிழரான பிரியாவை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் பிரியாவின் உடல்நிலை மோசமடைகின்றது இதன் காhரணமாக அவரை கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டுசெல்லக்கூடாது என மருத்துவர்கள் வாதிட்டுவந்த நிலையிலேயே அதிகாரிகள் அவரை பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியாவை மருத்துவபரிசோதனைக்காக கொண்டு செல்லதிட்டமிட்டிருந்தனர்,ஆனால் அதற்கு சில மணிநேரத்துக்கு எல்லை காவல் படையினர் தலையிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை விமானநிலையத்துக்கு ...

Read More »

சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் ஆஸ்திரேலிய கும்பல்

ஆஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் அவர்களை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் சீன மாணவர்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆஸ்திரேலிய கும்பல் ஒன்று அவர்களை குறி வைத்து கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சீனாவின் போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல மாணவர்களை இந்த கும்பல் போனில் தொடர்பு ...

Read More »

அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி 3 பில்லியன் விலங்குகள் பாதிப்பு – ஆய்வில் தகவல்

அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டில் பேரழிவை ஏற்படுத்திய ;காட்டுத்தீயினால் சுமார் 3 பில்லியன் விலங்குகள் உயிரிழந்தது அல்லது இடம்பெயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன. விஞ்ஞானிகள் கூற்றுப்படி, நாட்டின் பூர்வீக வனவிலங்குகளுக்கு ஏற்படும் தாக்கத்தின் அளவை முதன்முறையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது “நவீன வரலாற்றில் மிக மோசமான வனவிலங்கு பேரழிவுகளில் ஒன்றாகும்” என்று இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) தெரிவித்துள்ளது. கடந்த கோடையில் காட்டுத் தீப்பிழம்புகளால் ஒவ்வொரு அவுஸ்திரேலிய மாநிலத்திலும் பரவி 33 பேர் உயிரிழந்தனர். அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 10 விஞ்ஞானிகள் குழு பாலூட்டிகள், ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மேலும் உயிரிழப்புகள் ஏற்படலாம்- மருத்துவ அதிகாரி

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் காரணமாக எதிர்வரும் நாட்களில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என பிரதிமருத்துவ அதிகாரி மைக்கல் கிட் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் விக்டோரியாவில் 532 பேரும், நியுசவுத்வேல்சில் 17 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் மேலும் ஆறு பேர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் இது வரை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 14,935 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள மைக்கல் கிட் 161 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் மேலும் ...

Read More »

உடல்நல மோசமடைந்ததால் பிரியா ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்!

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தமிழ் அகதி குடும்பம்: உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவி ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீவில் பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரு குழந்தைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குடியேற்றத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உடல்நல மோசமடைந்ததால் பிரியா ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனால் குழந்தைகளும் அவரது கணவரும் பிரியாவிடம் இருந்து பிரிந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த ...

Read More »

ஆஸ்திரேலிய அகதிக்கு நியூசிலாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது!

மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த பெஹ்ரூஸ் பூச்சானி எனும் குர்து அகதிக்கு நியூசிலாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த இவர், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். இத்தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த அனுபவத்தை No Friend But the Mountains என்ற நூலாகவும் எழுதியுள்ள பூச்சானி குர்து பத்திரிகையாளராகவும் அறியப்படுகிறார். இந்த நூல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நியூசிலாந்தில் நடைபெறும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ள சென்ற பூச்சானி மீண்டும் மனுஸ்தீவுக்கு இனி ...

Read More »