2009 இற்கு பின்னர், சனநாயக வழியில் பெருங்கட்டமைப்பாக உருவாக்கி உலகத்தமிழர் பேரவையாக (GTF) செயற்படுவது நல்லது என தீர்மானித்து புலம்பெயர்ந்த தமிழர்கள் கனதியாக வாழும் நாடுகளில் கிளை அமைப்புகளை நிறுவி, அவுஸ்திரேலியாவில் உருவான ATC உம் அதனுடன் இணைந்தது.
ஆனால் சில வருடங்களில், இம்மானுவேல் பாதிரியாரும் சுரேந்திரனும் சுமந்திரனுடன் இணைந்து அதன் நோக்கத்தை திசைதிருப்பி, சிறிலங்கா அரசுக்கு வெள்ளையடிக்க தலைப்பட்டனர்.
இப்போது, இன்றைய தேர்தலில் கூட்டமைப்பை ஆதரிக்குமாறும் குறிப்பாக சுமந்திரனை தெரிவு செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த முடிவை மேற்குறிப்பிட்ட மூவரின் சதி எனவும். இதனை ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கோ குறிப்பாக ஏரிசிக்கோ தெரியப்படுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இப்போது அவுஸ்திரேலிய தமிழர் பேரவையானது உலகத்தமிழர் பேரவையிலிருந்து நேற்று இரவு விலகுவதாக அறிவித்திருக்கிறது.
தமிழ்மக்களின் உரிமை அரசியலை விலைபேசி விற்றுவிட துடித்த சுமந்திரனும் அவர்களுக்கு துணைபோனவர்களும் இப்போது அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.
இதுபற்றி அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் அறிக்கை ஆங்கிலத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
அதன் தமிழ் சுருக்கம் வருமாறு:
கொள்கை ரீதியிலான அடிப்படை வேறுபாடுகள் காரணமாக, உலகத் தமிழர் பேரவையிலிருந்து அவுஸ்ரேலியத் தமிழர் பேரவை உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை 4 ஒகஸ்ட் 2020 அன்று வெளியேறியுள்ளது.
அவுஸ்ரேலியத் தமிழர் பேரவையின் பெயர், இலச்சினை அல்லது தலைவரின் கையொப்பம் இன்றி வெளிவந்த உலகத் தமிழர் பேரவையின் அண்மைக் கால அறிக்கைகள் மற்றும் கருத்துக்களுக்கு அவுஸ்ரேலியத் தமிழர் பேரவையின் ஒப்புதல் பெறப்படவில்லையென்பதையும் தெரியப்படுத்த விரும்புகிறோம்.
குறித்த விடயங்களில் பரஸ்பர புரிந்துணர்வும் கலந்தாலோசனையும் இடம்பெறும் பட்சத்தில், தாயகத்தில் வாழும் எமது மக்களின் நலனை முதன்மைப்படுத்தும் எந்த அமைப்புகளுடனும் அவுஸ்ரேலியத் தமிழர் பேரவை தொடர்ந்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற தயாராக உள்ளது என்பதையும் அறியத்தர விரும்புகிறோம்.
Eelamurasu Australia Online News Portal
