ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த 33 வயதாகும் எலிசபெத் புரூக் மற்றும் அவரது கணவர் 32 வயதாகும் ஆடம் புரூக் ஆகியோர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதற்குக் காரணம் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளைத் தத்தெடுக்கும் திட்டத்தை அந்நாடு இந்தியாவுடன் மீண்டும் தொடங்கவுள்ளது. எலிசபெத்தின் 14ஆம் வயதில் பாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ரோம் (polycystic ovarian syndrome) எனும் கருப்பை கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது எனும் செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்ட அதே காலகட்டத்தில் ‘ராஜா ஹிந்துஸ்தானி’ இந்தி திரைப்படத்தை அவர் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
ஆஸ்திரேலியாவில் ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை!
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குலசேகர பாண்டிய மன்னரால் ...
Read More »அவுஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புதிய விசா!
தெற்கு அவுஸ்திரேலியாவில் புதிய விசா ஒன்று அறிமுகம் செய்ய அரசு முனைப்புக் காட்டியுள்ளது. இந்தப் புதிய விசா ஒன்றை அறிமுகப்படுத்துவதற்காக 4 லட்சம் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த விசாவில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் முதலீடு செய்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் புதிய தொழில்முனைவோரை வரவழைக்கும் நோக்கில் இப்புதிய விசா திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதேவேளை அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள entrepreneurial and Business & Innovation விசாவிலிருந்து இது மாறுபட்டது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ...
Read More »யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியை சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதிக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் Bryce Hutchesson யாழ் மாவட்ட பாதுகாப்பு படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல தர்ஷன கெட்டியாராச்சியை நேற்று (07) சந்தித்தார். யாழ். மாவட்ட கட்டளைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான தொடர்பாடல் பற்றியும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்துவற்கு செய்ய வேண்டிய வழிவகைகள பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
Read More »ஜப்பானுக்கு உதவியாக ரோந்து விமானங்களை அனுப்பிய ஆஸ்திரேலியா!
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளை மீறி நடுக்கடலில் கப்பல் விட்டு கப்பலில் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடும் வடகொரியாவை கண்காணிக்க ஜப்பானுக்கு உதவியாக 3 ரோந்து விமானங்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அனுப்பியுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்தது. மேலும், ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையிலும் முழுமையான வெற்றி பெற்றதாகவும் அந்நாடு தெரிவித்திருந்தது. இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு அந்நாட்டின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) ...
Read More »வடக்கின் அபிருத்திக்கு நிதியுதவி வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்!
வட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியினை சிறிலங்கா அரசுக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய நாட்டின் சிறிலங்காவுக்கான தூதுவர் ப்ரைஸ் ஹட்ச்சனை (Bryce Hutchesson) தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள ஆளுநரின் செயலகத்தில் இன்று (6) முற்பகல் 11.30 மணியளவில் சந்தித்து கலந்துரையாடியே போதே இதனை தெரிவித்த அவர், இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வட மாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் ...
Read More »வீடியோ கேம்ஸ் விளையாடுவதை தடுத்த தாய்! தாக்கிய மகன்!
அவுஸ்திரேலியாவில் 14 வயது சிறுவன், வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்த தாயை தலையில் பலமாக தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகன் (14) என்ற சிறுவனுக்கு பிளே ஸ்டேஷன் வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வமுள்ள நிலையில் இரவு முழுவதும் விளையாடி வந்துள்ளான். கேமின் சுவாரஸ்யத்தாலும், பரபரப்பாலும் உள்ளிழுக்கப்பட்ட லோகன் இந்த கேமிற்கு அடிமையாகவே மாறியுள்ளார். ஒரு கட்டத்தில் கேம்ஸ் விளையாடக்கூடாது என லோகனின் தாய் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகன், அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளார். ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவரது தாய் பொலிசாரை அழைத்ததையடுத்து, ...
Read More »அவுஸ்ரேலியாவில் ஈழ அகதி விபத்தில் பலி!
சிட்னியில் உள்ள Pendle Hill பகுதியில் உள்ள Gilba Road இல் புதன்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்ற வீதிவிபத்தில் தமிழ் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த “ட்ரக்” மோதியதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மன்னார் பேசாலையை சேர்ந்த 25 வயதுடைய மேர்வின் பெர்ணான்டோ என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.
Read More »அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டவருக்கு நீதிகோரி கையெழுத்து வேட்டை!
அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு நீதிகோரி கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் இலங்கையை சேர்ந்த கமீர் நிஜாப்தீனுக்கு நீதி கோரியே கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் change.org இணையத்தளத்தில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த முகாந்திரமும் இல்லாமல் குறித்த இலங்கையர் கைது செய்தது மட்டுமல்லாமல், உரிய சட்ட வசதிகளை மறுத்தும், அவர் குறித்த செய்திகளை திரிபுபடுத்தி வெளியிட்டு வருகின்ற அரச ...
Read More »புதிய தோற்றத்துடன் அவுஸ்திரேலிய நாணயங்கள்!
அவுஸ்திரேலியாவில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய நாணயங்களில் எலிசபெத் மகாராணியின் புதிய தோற்றம் பதிக்கப்படவுள்ளது. நாணயங்களில் பொறிக்கப்படவுள்ள மகாராணியின் புதிய தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை Governor-General Peter Cosgrove நேற்று (03) வெளியிட்டு வைத்துள்ளார். இதேவேளை பிரித்தானியாவைச் சேர்ந்த Jody Clark என்பவரினால் வடிவமைக்கப்பட்ட மகாராணியின் புதிய தோற்றம் பதிக்கப்பட்ட நாணயங்கள் அடுத்த ஆண்டு முதல் பாவனைக்கு வரும் என தெரிகிறது.
Read More »