புதிய தோற்றத்துடன் அவுஸ்திரேலிய நாணயங்கள்!

அவுஸ்திரேலியாவில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய நாணயங்களில் எலிசபெத் மகாராணியின் புதிய தோற்றம் பதிக்கப்படவுள்ளது.

நாணயங்களில் பொறிக்கப்படவுள்ள மகாராணியின் புதிய தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை Governor-General Peter Cosgrove  நேற்று (03) வெளியிட்டு வைத்துள்ளார்.

இதேவேளை பிரித்தானியாவைச் சேர்ந்த Jody Clark என்பவரினால் வடிவமைக்கப்பட்ட மகாராணியின் புதிய தோற்றம் பதிக்கப்பட்ட நாணயங்கள் அடுத்த ஆண்டு முதல் பாவனைக்கு வரும் என தெரிகிறது.