ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் விவகாரம் தொடர்பில் முழுமையாக விசாரிக்க ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது பிரியா, நடேசலிங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகள் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அதை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்துள்ளார். பாதுகாப்பு கருதியே அவர்கள் தடுப்பு முகாமிற்கு அருகாமையில் உள்ள வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதை நிராகரித்துள் பிரியா, “இது சுத்த பொய். நாங்கள் தடுப்பு முகாமிற்குள் தான் வைக்கப்பட்டுள்ளோம். தடுப்புச்சுவரை தாண்டி வெளியே ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்!
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். நியுயோர்க்கில் ஐக்கியநாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு எதிர்வரும் 23 ம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல உலகநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் இடம்பெறுகின்றன. அவுஸ்திரேலியாவின் எட்டு முக்கிய நகரங்களிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2500ற்கும் அதிகமான அவுஸ்திரேலிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை ...
Read More »பிரியா நடேஸ் குடும்பத்தை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் நாளை வரை தடை!
ஈழ தமிழ் அகதிகள் குடும்பத்தை நாடு கடத்துவதை தடுக்கும் உத்தரவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் நாளைவரை நீடித்துள்ளது. பிரியா நடேஸ் தம்பதியினரையும் குழந்தைகளையும் நாடு கடத்துவதை தடுத்து நீதிமன்றம் விதித்த உத்தரவு இன்றுடன் முடிவடையிருந்த நிலையிலேயே நீதிமன்றம் தடை உத்தரவை நாளை வரை நீடித்துள்ளது. தனது முடிவு குறித்து தீர்மானிப்பதற்கு மேலும் கால அவகாசம் அவசியம் என்பதால் தடை உத்தரவை நாளை வரை நீடித்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் கடும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
Read More »ஆஸி.யில் பறவையின் தாக்குதலுக்கு ஆளானவர் மரணம்!
பறவையிடமிருந்து தப்பிக்க முயல்கையில், வேகமாக துரத்திவந்த பறவை தாக்கியதில், தலையில் காயம்பட்டு 73 வயது சைக்கிள் பயணி ஒருவர் இறந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளதாக ஆஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது. இயக்குநர் ஆல்பர்ட் ஹிட்ச்காக் படத்தில் வருவது போன்று பறவை தாக்கி மனிதன் இறந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து ஊடகங்கள் கூறியுள்ளதாவது: சிட்னிக்கு தெற்கே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், வொல்லொங்கொங்கின் வடக்கு புறநகர்ப் பகுதியான வூனோனாவில் இச்சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. அங்குள்ள நிக்கல்சன் பூங்காவின் வேலியை ஒட்டியப் பகுதியில் இந்த பயணி ...
Read More »இறந்த பின்னரும் ஓராண்டுக்கு புரண்டு படுக்கும் மனித உடல்!
இறந்தபின் உடல்களில் நகர்வு இருக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒருவர் இறந்துவிட்டால், அவரை அமைதியாக இளைப்பாறுங்கள் என்கிறோம் (Rest in peace). ஆனால் இறந்த உடல்கள் இளைப்பாறுவதில்லை என ஆய்வு ஒன்றை மேற்கொண்ட ஆய்வாளர்கள் சிலர் கண்டறிந்துள்ளார்கள். சிட்னிக்கு அருகில் ஒரு இடத்தில், 17 மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஆய்வாளர்கள் இறந்த உடல்களை பெட்டிக்குள் வைத்து அவற்றை கமெராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்கள். உடல் அழுகும்போது, குறிப்பிடத்தக்க அளவில் உடல் நகர்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வின் முக்கிய பயன் என்னவென்றால், ...
Read More »அகதியை அடிமையாக வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய தம்பதி மீது குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானியரை மிட்டாய் கடையில் அடிமையாக வைத்திருந்ததாக மெல்பேர்னில் உள்ள மருத்துவர் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2015- 2017 ஆண்டுகளில் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளரை கட்டாய உழைப்பிற்கு உட்படுத்தி வர்த்தகம் செய்ததாக சய்யத் பார்ஷ்சி (46) மற்றூம் நகஹ்மே மோஸ்தாபே (45) என்ற தம்பதியனர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வாரத்தின் ஏழுநாட்களும் 14 மணிநேரம் அவர்கள் வேலை வாங்கியதாக ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் மெல்பேர்ன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பெர்ஷிய புத்தாண்டு மற்றும் ரமலான் நோன்பின் போதும், நீண்ட நேரம் வேலைவாங்கியாதாகவும் மூன்று ...
Read More »ஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்சமாம் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
ஒரு அணிக்கு எதிராக அதிக அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாமின் சாதனையை ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்தார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இரண்டாம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ...
Read More »ஆஸ்திரேலிய அணியை மீண்டும் சுமித் வழிநடத்துவார் – மார்க் டெய்லர்
ஆஸ்திரேலிய அணியை மீண்டும் சுமித் வழிநடத்துவார் என்று முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டின்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கேப்டன் பதவியை இழந்ததோடு ஓராண்டு தடையை அனுபவித்தார். தடை காலம் முடிந்து கடந்த மார்ச் மாதம் அணிக்கு திரும்பினார். மேலும் ஓராண்டு காலம் அவருக்கு எந்த போட்டிகளிலும் கேப்டன் பதவி வழங்கப்படாது என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது. இதன்படிபார்த்தால் ...
Read More »ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்து விட்டார்கள்!
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்து விட்டார்கள் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பொதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் புற்கள் நிறைந்த காணப்படும். டியூக்ஸ் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் இங்கிலாந்து செல்லும் அணிகள் மிகப்பெரிய அளவில் திணறும். இங்கிலாந்தை அதன் மண்ணில் வீழ்த்துவது மிகமிக கடினம். ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆடுகளங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான வகையிலேயே உள்ளன. இதனால் ...
Read More »நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு!
நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் சென்னை கொண்டு வரப்படுகிறது என பொன்.மாணிக்கவேல் தெரிவித்து உள்ளார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ந்தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற இருந்த நிலையில், ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதாவது சி.பி.ஐ.க்கு வழக்குகளை ...
Read More »