ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்து விட்டார்கள் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பொதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் புற்கள் நிறைந்த காணப்படும். டியூக்ஸ் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் இங்கிலாந்து செல்லும் அணிகள் மிகப்பெரிய அளவில் திணறும்.
இங்கிலாந்தை அதன் மண்ணில் வீழ்த்துவது மிகமிக கடினம். ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆடுகளங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான வகையிலேயே உள்ளன.
இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆதங்கம் அடைந்துள்ளார். ஆடுகளங்கள் குறித்து அவர் கூறுகையில் ‘‘எங்களை காட்டிலும் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான வகையில் ஆடுகளத்தை தயார் செய்து விட்டதாக நான் கருதுகிறேன்.
நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்போது, அவர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் தயாரிக்கப்படுகிறது. அவர்கள் இங்கிலாந்துக்கு வரும்போது, அவர்களுக்கு சாதகமான ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சரியானது என்று என்னால் பார்க்க முடியவில்லை.
கடந்த வருடம் இந்தியாவுக்கு எதிராக சிறந்த ஆடுகளத்தை கொடுத்தார்கள். ஆடுகளத்தில் புற்கள் இல்லாவிடிலும், இந்தியாவை விட எங்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் ஆடுகளம் எங்களுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டது.
எங்களது கிரிக்கெட் போர்டு போதுமான வகையில் போட்டியை நடத்தும் நாட்டிற்கான வாய்ப்பை போதுமான வகையில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்யும்போது, அவர்கள் அவர்களுக்கு ஏற்றபடி ஆடுகளத்தை தயார் செய்கிறார்கள். அதேபோல் எங்களுக்கு சாதகமான வகையில் கொஞ்சம் கூடுதலாக சாதகமான ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும்’’ என்றார்.