அவுஸ்திரேலியமுரசு

கிழக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களின் மழைக்காலம்!

கிழக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களின் மனதில் மட்டுமே இருந்திருக்கிறது இந்த மழைக்காலம். மழை, மழையிலிருந்து புறப்படும் மண்வாசம், அந்த மண்வாசம் தரும் நினைவுகள் என எதுவும் இவ்வாண்டு கிழக்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வாழும் மக்களுக்கு இல்லை. அந்த அளவுக்கு கோடை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வறட்சியானது மிக மோசமாக வேளாண் பண்ணைகளை பாதித்து இருக்கிறது. வானிலிருந்து ராய்ட்டர்ஸ் புகைப்பட கலைஞர் டேவிட் கிரே எடுத்திருக்கும் புகைப்படமானது இந்த வறட்சியின் பாதிப்பை அதே அடர்த்தியில் நமக்கு உணர்த்துகிறது. அந்த புகைப்படங்களை இங்கே   இங்கு ...

Read More »

அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை!

அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்த முயன்ற விவகாரம் தொடர்பில் ஊடகங்கள் அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தில் நடந்துகொள்ளும் விதத்தினை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து இந்த சர்ச்சையின் பின் தனது பதவியை இராஜினாமா செய்த லீமன் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.

Read More »

தடுப்பு முகாமிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிக் குடும்பம்!

நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தையை நவுறு தடுப்பு முகாமிலிருந்து பெற்றோருடன் மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சிட்னி கொண்டுவர அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மெல்போர்ன் பெடரல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த குழந்தையை அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படா நிலையில், தாய்வான் கொண்டுசெல்ல முடியும் என அவுஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது. இவ்விடயத்தை அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் தாய்வானில் குழந்தைக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் ...

Read More »

கணிதத்திற்கு ‘நோபல் பரிசு’ வென்றுள்ள ஆஸ்திரேலியத் தமிழர்!

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கணிதத் துறையில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் புதிய சிந்தனைகளை வளர்ப்பவர்கள் என்று கருதப்படும் 40 வயதிலும் குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் “Fields Medal” விருது, கணிதத்திற்கான ‘நோபல் பரிசு’ என்று பரவலாக அறியப்படுகிறது. இந்த விருது இரண்டு முதல் நான்கு கணித மேதைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த வருடம், இந்த விருது நால்வருக்கு வழங்கப்படுகிறது. அதில், 16 வயதிலேயே மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அக்‌ஷய் வெங்கடேஷ் என்ற பேராசிரியரும் ஒருவர். தற்போது 36 வயதான பேராசிரியர் அக்‌ஷய் வெங்கடேஷ் அமெரிக்காவின் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்ற நாய்!

ஆஸ்திரேலியாவில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட நாய் பதக்கம் வென்று அனைவரின் மனதையும் கவர்ந்தது. ஆஸ்திரேலியாவில் கால்கூர்லி நகரில் மராத்தான் போட்டி நடைபெற்றது. அதில் 21 கி.மீ. தூரம் (13 மைல்) ஓட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும் அனைவரும் ஒடினார்கள். அவர்களுடன் சேர்ந்த ஒரு நாயும் ஓடியது. போட்டியாளர்களுடன் அந்த நாய் இறுதிவரை ஓடி முடித்தது. எனவே, அந்த நாய்க்கு பதக்கம் வழங்கப்பட்டது. அந்த நாயின் பெயர் ஸ்டார்மி. கருப்பும், பிரவுன் நிறமும் கொண்ட அந்த நாய் ...

Read More »

மர்ம அச்சுறுத்தல்- அவுஸ்திரேலிய பாடசாலையிலிருந்து மாணவர்கள் வெளியேற்றம்!

அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் உள்ள பாடசாலையொன்றிலிருந்து மர்ம அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத அச்சுறுத்தலை தொடர்ந்து தீடிரென பாடசாலையை சுற்றிவளைத்த பெருமளவு காவல்துறையினர் அங்கிருந்து மாணவர்களை வெளியேற்றியுள்ளனர். மேலும் பெற்றோர்களை பாடசாலையிலிருந்து விலகியிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். காலை 9 மணிக்கு ஆஸ்டேல் உயர்தரப் பாடசாலைக்கு விரைந்த காவல்துறையினரே மாணவர்களை அகற்றியுள்ளனர். மாணவர்கள் வெளியேற்றப்படுவதால் வாகனசாரதிகளை அப்பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை இந்த நடவடிக்கைகக்கு என்ன காரணம் என்பதை காவல்துறையினர் இன்னமும் அறிவிக்கவில்லை. இதேவேளை பாடசாலை பாதுகாப்பாக உள்ளது என ...

Read More »

சிறந்த சமையலாளருக்கான போட்டியில் (Master Chef Australia) சசி செல்லையா வெற்றி!!

2018 ஆம் ஆண்டுக்கான ஆக சிங்கப்பூரில் பிறந்து தற்போது தென் அவுஸ்திரேலியாவில் வாழும் சசி செல்லையா வெற்றியடைந்துள்ளார். சிங்கப்பூரில் பிறந்த 39 வயதான சிவா அவுஸ்திரேலியாவுக்கு 2011 இல் குடி பெயர்ந்தார். தற்போது அடலெய்ட் நகரில் சிறை அதிகாரியாகப் பணியாற்றும் இவர் Master Chef Australia ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் முதற்தடவையாக 93 புள்ளிகளை அதிகூடிய புள்ளிகளாக பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

அடைக்கலம் தந்த அவுஸ்திரேலியாவிற்கு நன்றிக் கடனாக “இரத்த தானம்”!

“இலங்கையில் 1983ம் ஆண்டு அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறியவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை, துயர்துடைப்பு மாதமாக அனுஷ்டித்து வருகிறது. அந்தவகையில் துயர்துடைப்பு மாத நிகழ்வுகளில் முக்கிய நிகழ்வாகவும், கறுப்பு ஜுலை நினைவாகவும், அடைக்கலம் தந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கும் நன்றிக் கடனாகவும் “இரத்த தானம்”, வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. எதிர்வரும் ...

Read More »

கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர் திடீர் மரணம்!

மாணவர்களுக்கு கல்வி கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் தீடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால் அந்த இடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் Berwick College பாடசாலையில் கடந்த வியாழக்கிழமை மாணவர்களுக்கு கல்வி கற்பித்துக் கொண்டிருக்கும் போது ஆசிரியர் ஒருவர் அந்த இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார். தீடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால் பீஜி நாட்டை பூர்வீகமாக கொண்ட சத்யா நாதன் (வயது 60) என்ற ஆசிரியரின் திடீர் உயிரிழப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது. இதேவேளை இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு பீஜியிலிருந்து மெல்போர்னுக்கு வந்து குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

பீட்ஸா போட்டி: அவுஸ்திரேலியா உணவகம் முதலிடம்!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னின் பிரபல பீட்ஸா உணவகம் தயாரித்த பீட்ஸா, உலகளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. இந்த பீட்சாவினை “400 Gradi” பிரபல பீட்ஸா உணவகம் தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் உலகம் எங்கிலும் இருந்து பல்லாயிரம் உணவங்கள் இத்தாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தன. இருப்பினும் இப்போட்டியில் கலந்து கொண்ட உணவங்கள் தயாரித்த பீட்ஸாவினை பின்தள்ளி 400 Gradi மெல்பேர்ன் பீட்ஸா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Read More »