அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் கூறியுள்ளார்.
தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்த முயன்ற விவகாரம் தொடர்பில் ஊடகங்கள் அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தில் நடந்துகொள்ளும் விதத்தினை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதனைத்தொடர்ந்து இந்த சர்ச்சையின் பின் தனது பதவியை இராஜினாமா செய்த லீமன் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.