பீட்ஸா போட்டி: அவுஸ்திரேலியா உணவகம் முதலிடம்!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னின் பிரபல பீட்ஸா உணவகம் தயாரித்த பீட்ஸா, உலகளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது.

இந்த பீட்சாவினை “400 Gradi” பிரபல பீட்ஸா உணவகம் தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் எங்கிலும் இருந்து பல்லாயிரம் உணவங்கள் இத்தாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தன.

இருப்பினும் இப்போட்டியில் கலந்து கொண்ட உணவங்கள் தயாரித்த பீட்ஸாவினை பின்தள்ளி 400 Gradi மெல்பேர்ன் பீட்ஸா முதலிடத்தைப் பிடித்துள்ளது.