கிழக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களின் மனதில் மட்டுமே இருந்திருக்கிறது இந்த மழைக்காலம். மழை, மழையிலிருந்து புறப்படும் மண்வாசம், அந்த மண்வாசம் தரும் நினைவுகள் என எதுவும் இவ்வாண்டு கிழக்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வாழும் மக்களுக்கு இல்லை. அந்த அளவுக்கு கோடை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த வறட்சியானது மிக மோசமாக வேளாண் பண்ணைகளை பாதித்து இருக்கிறது. வானிலிருந்து ராய்ட்டர்ஸ் புகைப்பட கலைஞர் டேவிட் கிரே எடுத்திருக்கும் புகைப்படமானது இந்த வறட்சியின் பாதிப்பை அதே அடர்த்தியில் நமக்கு உணர்த்துகிறது.
அந்த புகைப்படங்களை இங்கே
இங்கு ஏதோ ஒரு காலத்தில் வசந்தம் வீசி இருக்கிறது என்பதற்கு அடையாளமாக ஒரே ஒரு மரம் மட்டும் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வால்கெட்டில் உள்ள ஒரு பண்ணையில் இருக்கிறது. அந்த பண்ணையின் உரிமையாளர் மே மெக்கவுன் 2010 ஆன் ஆண்டிலிருந்தே போதுமான மழை இங்கு இல்லை என்கிறார்.
ஏறத்தாழ 98 சதவீத நியூ சவுத் வேல்ஸ் பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. குயின்ஸ்லாந்த் மாகாணத்தின் மூன்றில் இரண்டு பகுதி வறட்சியின் தழும்புகளை சுமந்து நிற்கிறது. வறட்சியின் காரணமாக கால்நடைகளுக்கு போதுமான உணவு தங்கள் நிலத்தில் இல்லாததால, வெளியிலிருந்து அதிக பணம் கொடுத்து தீவனம் வாங்குகிறார்கள். இது விவசாயிகளின் செலவினங்களை அதிகப்படுத்தி உள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் குண்ணிடா பகுதியில் உள்ள ஓர் அணை வறண்டு விட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான அரசு உதவிகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியா மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜூன் மாதம் பார்வையிட்ட ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம்,பருவநிலை மாற்றத்திற்கும் இப்போது ஆஸ்திரேலியே எதிர்கொண்டு வரும் வறட்சிக்கும் நேரடி தொடர்பு உள்ளது என்றார்.