“இலங்கையில் 1983ம் ஆண்டு அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும்,
தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறியவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை, துயர்துடைப்பு மாதமாக அனுஷ்டித்து வருகிறது.
அந்தவகையில் துயர்துடைப்பு மாத நிகழ்வுகளில் முக்கிய நிகழ்வாகவும், கறுப்பு ஜுலை நினைவாகவும்,
அடைக்கலம் தந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கும் நன்றிக் கடனாகவும் “இரத்த தானம்”, வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் August மாதம் 18ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை Bundoora இல.21 Copernicus Crescent இல் உள்ள Polaris Town Centre (Off Plenty Rd),
அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்க இரத்தவங்கி ஊடாகவும், September 1ம் திகதி சனிக்கிழமை காலை 11 மணி முதல் பி.பகல் 1.30 மணிவரையும் Mt.Waverly,
Blackburn வீதியில் Pinewood Shopping centre இல் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்தவங்கி ஊடாகவும் இரத்ததானம் வழங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.