அவுஸ்திரேலியமுரசு

செல்லப் பிராணிகளுக்கான செயற்கை நகங்கள்!

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த காலி லோரிடாஸ், செல்லப் பிராணிகளுக்கான சலூன் நடத்திவருகிறார். சமீபத்தில் செல்லப் பிராணிகளுக்கான செயற்கை நகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். “பூனை, நாய் போன்றவற்றின் நகங்கள் சோஃபா குஷன்களைக் கிழித்துவிடுகின்றன. மனிதர்கள் மீது படும்போது காயம் ஏற்படுகிறது. இதற்காக மருத்துவரிடமும் செல்ல நேரிடுகிறது. அதனால்தான் செல்லப் பிராணிகளின் நகங்களை வெட்டிவிட்டு, செயற்கை நகங்களை மாட்டிவிடுகிறேன். இதனால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் கிடையாது. 40 வண்ணங்களில் கிடைக்கும் இந்த நகங்களுக்கு 8 வாரங்கள் வரை உத்திரவாதம் அளிக்கிறேன்” என்கிறார் காலி லோரிடாஸ்.

Read More »

அவுஸ்ரேலியாவில் குடியுரிமைச் சட்டம் மாற்றம்: அகதிகளுக்கு சிக்கல்?

அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவில், மாற்றங்களைச் செய்வது தொடர்பில், அவுஸ்ரேலிய செனட்டர்கள் ஆலோசிக்க வேண்டுமென ஐ.நா சபை தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய அரசு முன்மொழிந்துள்ள மாற்றங்கள், அகதிகளுக்கு பாதகமாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை சர்வதேச விதிமுறைகளை மீறும் வகையில் அமையக்கூடுமென ஐ.நா வின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR சுட்டிக்காட்டியுள்ளது. குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவினை ஆராயும் செனட் குழுவிடம், 500 தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கின்ற நிலையில், UNHCR-உம் இதில் அடங்குகிறது. Permanent Residency எனப்படும் நிரந்தர ...

Read More »

அவுஸ்ரேலியாவில் குழந்தைகளுக்கான கட்டாயத் திருமணம் அதிகரிப்பு

அவுஸ்ரேலியாவில், குழந்தைகளுக்கான கட்டாயத் திருமணங்கள் மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவில், கட்டாய மற்றும் குழந்தைத் திருமணங்கள் ஒரு குற்றச் செயலாக 2013இல் சட்டமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை 175 கட்டாயத் திருமணங்கள் பற்றி புகார் செய்யப்பட்டிருந்தன. 2014-15ம் ஆண்டுகளில் 33ம், 2016/17இல் 61 கட்டாயத் திருமணங்கள் தொடர்பாக பொலிசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளன. அதிகமான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்ற முயல்வதனால் இக் குற்றச் செயலை முற்றாக நிறுத்துவது கடினமாக இருப்பதாக AFP பேச்சாளர் Dan Evans தெரிவித்துள்ளார்.

Read More »

தீவிரவிசாரணை காரணமாக மன உளைச்சல்! – சிட்னி விமான தாக்குதல்!

சிட்னியில் பயணிகள் விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஓருவரை காவல்துறையினர் விடுதலை செய்துள்ள அதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் அப்துல் மெர்கி என்ற 50 வயது நபரை காவல்துறையினர் செவ்வாய்கிழமை இரவு விடுதலை செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன எனவும் உரிய தருணத்தில் தகவல்களை வழங்குவவோம் என காவல்துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதேவேளை தனது கட்சிக்காரர் தீவிரவிசாரணையை எதிர்கொண்டுள்ளார் எனவும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு!

அவுஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் பாலியல் வன்முறைகள் பரவலாக இடம்பெற்று வருவதாக Universities Australia அமைப்பை ஆதாரம் காட்டி The Human Rights Commission அறிக்கை வெளியிட்டுள்ளது. 39 பல்கலைக் கழகங்களில் பயிலும் சுமார் 30,000 ற்கும் மேற்பட்ட மாணவ மாணவியரிடம் நடத்தப்பட்ட ஆய்விலேயே குறித்த பாலியல் வன்முறை குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. 2016ம் ஆண்டில் 26 வீதமானவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும், 1.6 வீதத்தினர் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.

Read More »

அவுஸ்திரேலிய விமானங்கள் மீது தாக்குதல் திட்டம்: ஒருவர் விடுவிப்பு

அவுஸ்திரேலிய விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமானங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் சிலர் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பாதுகாப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இச்சம்பம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 50 வயதுடைய நபர் ஒருவர் எவ்வித குற்றச்சாட்டுகளும் பதியப்படாமல் விடுக்கப்பட்டுள்ளதாக AFP இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. மேலும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு விடயங்களில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் விமான நிலையங்களில் பணி புரிவோர் தொடர்பிலும் மேலதிக பாதுகாப்பு ...

Read More »

அவுஸ்ரேலியா – மனஸ் தீவில் இடம்பெற்ற வேறுவேறு வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயம்

மனஸ் தீவில் இடம்பெற்ற வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர். வார இறுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவினால் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள  அகதிகளே இவ்வாறு தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளனர். மனஸ்தீவின் நகரப்பகுதியில் சூடானை சேர்ந்த அகதி தங்கியிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த அகதியின் காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது ஈரானிய அகதியின் கையை நபர் ஒருவர்  வெட்டி காயப்படுத்தியுள்ளார். ஈரானிய அகதிக்கு ஏற்பட்டள்ள மோசமான காயங்களை காண்பிக்கும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் விமானப்பயணிகள் மீதான சோதனைகள் தீவிரம்!

அவுஸ்ரேலியாவின் சிட்னியில் விமானங்களை தாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி அம்பலமாகியுள்ளதை தொடர்ந்து விமானப்பயணிகளை சோதனையிடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக சிட்னி மற்றும் மெல்பேர்ன் விமானநிலையங்களில் பெரும் தாமதம் நிலவுவதுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் சிட்னி விமானநிலையத்தில் மிக நீண்ட வரிசையில் பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொள்வதற்காக காத்திருக்கின்றனர். மெல்பேர்ன் விமான நிலையத்திலும் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கின்றனர்-மேலும் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகளவு நடமாட்டத்தையும் காண முடிகின்றது. உள்ளுர் விமானசேவைகளை பயன்படுத்துபவர்களை இரண்டு மணித்தியாலம் முன்னதாக வருமாறும்  இதன் மூலம் தாமதங்களை தவிர்க்கலாம் எனவும்  அதிகாரிகள் ...

Read More »

80,000 ஆண்டு பழைய முதுமக்கள் தாழி… அவுஸ்ரேலியா கீழடியில் நடப்பது என்ன?

“கடக்… தடக்…டொம்… தம்…. பட்ட்…. டமார்…” இப்படி எந்த சத்தங்களும் அங்கு கேட்கவில்லை. மிக மெதுவாகவும், ஜாக்கிரதையாகவும் அந்த இடத்தைத் தோண்டிக்கொண்டிருந்தனர். ஓர் இனத்தின் மிகப் பெரிய வரலாற்றை ஆராய இருக்கிறோம் , அது மனித இனத்தின் பல கேள்விகளுக்கு விடையளிக்கலாம் என்ற ஆர்வம் இருந்தாலும், இது குறிப்பிட்ட இனத்தின் மண், அவர்களுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் பத்திரமாக இதைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்கிற பொறுப்பு அவர்களின் ஒவ்வொருவரின் உளிச் சத்தத்திலும் கேட்கவே செய்தது. சிறு, சிறு கற்களைக் கூட அந்த மிருதுவான ப்ரெஷ் கொண்டு சுத்தப்படுத்தினர். ...

Read More »

சோமாலியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 39 அவுஸ்ரேலிய வீரர்கள் பலி!

சோமாலியாவில் அமைதிப்படையைச் சேர்ந்த அவுஸ்ரேலிய ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோமாலியாவில் அல் கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவுடன் இயங்கும் அல் ‌ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. அவர்களை ஒடுக்க சோமாலியா ராணுவத்துடன் இணைந்து ஆப்பிரிக்க யூனியன் அமைதிப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆப்பிரிக்க யூனியன் ராணுவத்தில் 22 ஆயிரம் அவுஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் அவுஸ்ரேலிய  ராணுவத்துக்கு எதிராக நேற்று அல்‌ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். மொகாடிசு அருகே ...

Read More »