அவுஸ்திரேலிய விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விமானங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் சிலர் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பாதுகாப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இச்சம்பம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 50 வயதுடைய நபர் ஒருவர் எவ்வித குற்றச்சாட்டுகளும் பதியப்படாமல் விடுக்கப்பட்டுள்ளதாக AFP இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.
மேலும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு விடயங்களில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal