அவுஸ்ரேலியாவில், குழந்தைகளுக்கான கட்டாயத் திருமணங்கள் மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்ரேலியாவில், கட்டாய மற்றும் குழந்தைத் திருமணங்கள் ஒரு குற்றச் செயலாக 2013இல் சட்டமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவரை 175 கட்டாயத் திருமணங்கள் பற்றி புகார் செய்யப்பட்டிருந்தன. 2014-15ம் ஆண்டுகளில் 33ம், 2016/17இல் 61 கட்டாயத் திருமணங்கள் தொடர்பாக பொலிசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளன.
அதிகமான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்ற முயல்வதனால் இக் குற்றச் செயலை முற்றாக நிறுத்துவது கடினமாக இருப்பதாக AFP பேச்சாளர் Dan Evans தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal