சோமாலியாவில் அமைதிப்படையைச் சேர்ந்த அவுஸ்ரேலிய ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோமாலியாவில் அல் கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவுடன் இயங்கும் அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. அவர்களை ஒடுக்க சோமாலியா ராணுவத்துடன் இணைந்து ஆப்பிரிக்க யூனியன் அமைதிப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆப்பிரிக்க யூனியன் ராணுவத்தில் 22 ஆயிரம் அவுஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் அவுஸ்ரேலிய ராணுவத்துக்கு எதிராக நேற்று அல்ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
மொகாடிசு அருகே புலாமரீர் மாவட்டத்தில் அவுஸ்ரேலிய ராணுவ வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவற்றின் மீது தீவிரவாதிகள் தாக்கினர்.
அதில் 39 ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் பலியாகினர். இத்தகவலை அல்ஷபாப் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் அப்டியாசிஸ் அபு முசாப் தெரிவித்தார்.
ஆனால் இதை அவுஸ்ரேலிய ராணுவம் மறுத்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்ததாக கூறியுள்ளது. ஆனால் கொல்லப்பட்ட அவுஸ்ரேலிய வீரர்களின் உடல்கள் தங்களிடம் இருப்பதாக தீவிரவாதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.