அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவில் கார் வைத்திருப்பவர்களுக்கு!

வாகன விதிமுறைகளைப் பின்பற்றுவது என்பது அவசியம். வாகனத்திலுள்ள சில lights விளக்குகளை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தினால் அபராதம் செலுத்த நேரிடும். கார்களின் முன்-பின் புறம் இருக்க கூடிய fog light களை மூடுபனி மற்றும் மழையான காலநிலை தருணத்தில் வாகன சாரதிகள் சரியாக பார்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் பயன்படுத்த வேண்டும். இந்த சந்தர்ப்பத்தைத் தவிர்த்து பயன்படுத்தும் தருணங்களில் அபராதம் கட்ட நேரிடும். எவ்வளவு அபராத தொகை கட்டவேண்டும் தெரியுமா? இதோ அபராத தொகை நியூ சவுத் வேல்ஸ்- 110 டொலர்கள்- 2 demerit points விக்டோரியா- ...

Read More »

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராஜினாமா!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் இன்று தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 1998-ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இணைந்த ஜேம்ஸ் சதர்லெண்ட் 2001-ம் ஆண்டு முதல் தலைமை செயல் அதிகாரி பதவி வகித்து வந்தார். இது தொடர்பாக சதர்லெண்ட் கூறியதாவது:- 20 ஆண்டு காலமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் இருந்துள்ளேன். இதுதான் சரியான தருணம். ...

Read More »

ஆஸ்திரேலியாவில் மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய கோடீசுவரர் மரணம்!

ஆஸ்திரேலியாவில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் தனக்கான முத்திரை பதித்து வளர்ச்சி கண்டவர் இளம் வயது கோடீசுவரர் அலி பானட். இவரது ஆடம்பரமான வாழ்க்கைமுறை பல நேரங்களில் செய்தியாகவும் வெளிவந்ததுண்டு.இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ சோதனையில் இவருக்கு புற்று நோய் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. மட்டுமின்றி அடுத்த 7 மாதங்களில் மரணம் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில் தமது சொத்துக்கள் முழுவதையும் ஏழைகளுக்கு தானமாக வழங்க விரும்பிய அலி பானட், உடனடியாக அதற்கான பணியிலும் ...

Read More »

என்னால் மரணத்தின் வாசனையை உணரமுடியும்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஏரி கேலா எனும் பெண் உளவியலாளர், தன்னிடம் ஒரு வித்தியாசமான சக்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 24 வயதே ஆன இவர் தற்போது உளவியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் கூறும் போது தன்னால் ஒருவருக்கு மரணம் நிகழப்போகிறது என்பதை, முன்கூட்டியே கணிக்க முடியும் என கூறுகிறார். அவரது கணிப்பு பலமுறை அப்படியே நடந்திருக்கிறது எனவும் தெரிவித்திருக்கும் கேலா, முதல் முறையாக இந்த விஷயத்தை கண்டுவிடித்தது, தனது 12வது வயதில் தானாம். நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்ற கேலா ...

Read More »

ஜூன் 03: அவுஸ்திரேலியாவில் மாபோ நாள்!

மாபோ எதிர் குயின்ஸ்லாந்து (Mabo v Queensland) என்பது அவுஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்புக் கூறப்பட்ட புகழ் பெற்ற ஒரு வழக்காகும். 1992, ஜூன் 3 ஆம் நாள் தீர்ப்புக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  1788 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்து வந்த terra nullius (வெற்று நிலம் எவருக்கும் சொந்தமில்லாத நிலம்) என்ற கொள்கை இல்லாமல் செய்யப்பட்டது. தலைமுறைகளாக நிலம் வைத்திருந்த அவுஸ்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. இவ்வழக்கு முதன் முதலில் டொரெஸ் நீரிணையின் மறி ...

Read More »

ஆஸ்திரேலியா – இந்தோனேசிய படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கை!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே உள்ள திமோர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடிப்பு, மற்றும பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் ஆட்கடத்தல் உள்ளிட்ட செயல்களைக் கண்காணிக்கும் விதமாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கையில ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய எல்லைப் படை, இந்தோனேசிய கடலோர காவல்படை, இந்தோனேசிய கடல் மற்றும் மீன்பிடி விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் உள்ளடங்கிய முத்தரப்பு ரோந்து நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகின்றது. ஆப்ரேஷன் கன்னெட் (Operation Gannet) என அழைக்கப்படும் இந்நடவடிக்கையில் ரோந்து படகுகள்/ கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதே ...

Read More »

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுவர்களுக்கு கத்தோலிக்க தேவாலயம் நட்டஈடு!

அவுஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுவர்களுக்கு கத்தோலிக்க தேவாலயம் நட்டஈடு வழங்க உள்ளது. சிறுவர் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கும் தேசிய பொறிமுறைமையில் கத்தோலிக்க தேவாலயங்களும் இணைந்து கொண்டுள்ள நிலையில் இவ்வாறு நட்டஈடு வழங்க உள்ளது. கத்தோலிக்க தேவாலயங்களில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்கள் குறித்து ஐந்து ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. 1950ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் அவுஸ்திரேலியாவின் 7 வீதமான கத்தோலிக்க மதகுருமார் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  பாதிக்கபட்டோருக்கு ...

Read More »

கடவுச்சீட்டு விதிமுறையில் அதிரடி மாற்றம் செய்யும் அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலிய கடவுச்சீட்டில் புதிய மாற்றம் அதிரடியாக எதிர்வரும் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது என அவுஸ்திரேலிய கடவுச்சீட்டு அலுவலகம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்காக எடுக்கும் புகைப்படத்தில் prescription glasses-மூக்குக் கண்ணாடி அணிந்திருக்க முடியாது என்பது கட்டாயமாக்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேரின் புகைப்படங்கள் தெளிவற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதான காரணமாக மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தது என கூறப்பட்டுள்ளது. ஆகவே கடவுச்சீட்டு விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்க முடியாத நிலைக்கு தாம் தள்ளப்படுவதாக ...

Read More »

அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் அப்படி நடந்து கொண்டார்களா?

உலகளாவிய ரீதியில் நடைபெற்ற ஆட்ட நிர்ணய சதிகள் தொடர்பில் அல் ஜசீரா தொலைக்காட்சி விவரணம் ஒன்றை வெளியிட்டது. அதில் அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் match-fixing எனப்படும் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பணம் பெற்றுக்கொண்டு match-fixing-இல் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையென Cricket Australia வின் தலைமை நிர்வாகி James Sutherland கூறியுள்ளார். இதேவேளை அவுஸ்திரேலிய வீரர்கள் இச்செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என அவுஸ்திரேலிய அணியின் Test ...

Read More »

பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான அரசு தொடர்ந்தும் பின் தங்கிய நிலையில்!

அவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான அரசு தொடர்ந்தும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்கட்சியான லேபர் கட்சியை விட மால்கம் டர்ன்புல் தலைமையிலான அரசு பின்தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. The Australian வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் 52 – 48 என முன்னிலை வகிக்கிறது. கடந்த கருத்துக் கணிப்பினை விடவும் லேபர் கட்சி ஒரு புள்ளியால் முன்னேற்றம் அடைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இதேவேளை மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக மால்கம் டர்ன்புல் தொடர்ந்து முன்னேற்றம் ...

Read More »