உலகளாவிய ரீதியில் நடைபெற்ற ஆட்ட நிர்ணய சதிகள் தொடர்பில் அல் ஜசீரா தொலைக்காட்சி விவரணம் ஒன்றை வெளியிட்டது.
அதில் அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் match-fixing எனப்படும் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளது.
ஆனால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பணம் பெற்றுக்கொண்டு match-fixing-இல் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையென Cricket Australia வின் தலைமை நிர்வாகி James Sutherland கூறியுள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலிய வீரர்கள் இச்செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என அவுஸ்திரேலிய அணியின் Test captain Tim Payne குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal